திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இயக்குநர் பாரதிராஜா வயது முதிர்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பயனாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பியதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
பாரதிராஜாவுக்கு என்ன பிரச்னை?
முன்னதாக இயக்குனர் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டா்கள் கூறுகையில், நுரையீரலில் கடுமையான பாதிப்போடு பாரதிராஜா மருத்துவமனைக்கு வந்தாா். தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு அவா் குணமடைந்துள்ளாா். அவா் வீடு திரும்பினாலும், தொடா்ந்து ஓய்வில் இருக்க வேண்டும். வயது முதிா்வின் காரணமாகத் தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. அவா் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்'' என்றனர்