சினிமா

என்.ஜி.கே. படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை

webteam

சூர்யா நடித்திருக்கும் என்.ஜி.கே படத்தை இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் என்.ஜி.கே திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாக, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்-ன் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், அதிக பொருட் செலவுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்கள், சட்ட விரோதமாக வெளியிடப்படுவதால், மன உளைச்சலுடன், பண இழப்பும் ஏற்படுவதாக கூறியிருந்தார். 

அத்துடன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என பிரபு கோரிக்கை வைத்துள்ளார். சட்டவிரோதமாக இணையதளத்திலோ அல்லது கேபிள் டிவிகளிலோ படத்தை வெளியிட்டால் அது மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என மனு தாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, என்.ஜி.கே படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தார்.