சினிமா

’பெரம்பலூர் காவல்துறை’ - உதயநிதி படத்திற்கு ப்ளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப்பதிவு

’பெரம்பலூர் காவல்துறை’ - உதயநிதி படத்திற்கு ப்ளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப்பதிவு

Sinekadhara

பெரம்பலூர் பாலக்கரையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ப்ளக்ஸ் வைத்த காவலர் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி நடிப்பில் இன்று தேதி தியேட்டர்களில் வெளியானது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் ப்ளக்ஸ் வைத்துள்ளார். இதனால் பெரம்பலூர் போலீஸார் அவர்மீது வழக்குபதிவு செய்துள்ளனர். மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் செக்சன் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.