சினிமா

'பொம்மியை உருவாக்கிய சுதா கொங்கராவுக்கு ஸ்பெஷல் சல்யூட்' - கேப்டன் கோபிநாத்!

'பொம்மியை உருவாக்கிய சுதா கொங்கராவுக்கு ஸ்பெஷல் சல்யூட்' - கேப்டன் கோபிநாத்!

sharpana

மகளிர் தினத்தையொட்டி கேப்டன் கோபிநாத் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கராவையும் அப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியின் நடிப்பையும் பாராட்டி இருக்கிறார்.

கடந்த நவம்பர் 11-ஆம் தேதி வெளியான சூரரைப் போற்று படத்தைப் பார்த்துவிட்டு ’சூர்யாவை போற்று’  ’சுதாவைப் போற்று’ என்று இருவரது ரசிகர்களும் போற்றிக்கொண்டிருந்தனர். ஆனால், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் போற்றியது ஹீரோயினாக பொம்மி பாத்திரத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியைத்தான்.

 திருமணத்துக்கு முன்பு மணமகள் வீட்டை மாப்பிள்ளைகள் பார்த்து விடுகிறார்கள். ஆனால், தான் வாழப்போகும் வீட்டை மணமகள்கள், திருமணமானப் பிறகே பார்க்கவேண்டிய நிலை இன்னும் நிலவி வருவகிறது. அதை, உடைத்தெரிந்து மாஸ் ஓப்பனிங் எண்ட்ரி கொடுக்கும் அபர்ணா பாலமுரளி படத்தில் சுயமரியாதைப் பெண்ணாக நடித்து சூப்பர் சொல்ல வைத்தார்.

அதேமாதிரி, உங்களுக்கு ஏற்கெனவே கல்யாணமாகிடுச்சு. ப்ளைனு. அதேமாதிரி, எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. (பேக்கிரி) மொத கல்யாணத்துல ஏதாவது சாதிக்கமுடியுதா பார்ப்போம் என்று தனக்கான லட்சியத்தையும் விட்டுக்கொடுக்காமல் கெத்தாக வெளிப்படுத்தி, அதிலும் சாதித்து பெண்களுக்கு தன்னம்பிக்கையளித்தார். ஓவராக நடிக்காமல் காட்சிக்கு காட்சி வாய்ப் பேச்சையே ஓவர் டேக் செய்தது அபர்ணா கண்களால் பேசும் டயலாக்குகள். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான இப்படம் அங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அங்கும் பொம்மியாக நடித்த அபர்ணா பாலமுரளியை போற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘சூரரைப் போற்று’ படத்தை எடுக்க காரணமாக இருந்த கேப்டன் கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் “சூரரைப் போற்று படத்தில் பொம்மியை உருவாக்கிய சுதா கொங்கராவுக்கு ஸ்பெஷல் சல்யூட். அசாதாரணமான தைரியமான பெண்ணாக காட்டியுள்ளீர்கள். ஒரு குடும்பத்தில் வாழும்போது குடும்பத்திலுள்ள அனைத்து முரண்பாடுகளையும் ஏற்றுக்கொண்டே தனது கனவுகளையும் விட்டுக்கொடுக்காமல் தனது கனவுகளை எட்டிப்பிடிப்பது அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் கொடுக்கக்கூடியது” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியிருக்கிறார்.