சினிமா

தனுஷ் மீதான வழக்கு ரத்து

தனுஷ் மீதான வழக்கு ரத்து

webteam

தனுஷ் தங்களின் மகன் என கூறி மதுரை மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்தது.

நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களை விட்டு பிரிந்து சென்றதாகவும் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தனுஷ் தங்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். இந்த நிலையில் மேலூர் தம்பதியினர் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் ஒரு பகுதியாக தனுஷின் அங்க அடையாளங்கள் சோதிக்கப்பட்டன. மரபணு பரிசோதனை தேவை என மேலூர் தம்பதி கோரிய நிலையில், தனுஷ் தரப்பு அதற்கு மறுத்துவிட்டது. பல கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. தனுஷின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை, மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.