சினிமா

'அனுமதியின்றி கட்டிடம்' - சோனு சூட் மீது போலீசில் மும்பை மாநகராட்சி புகார்!

'அனுமதியின்றி கட்டிடம்' - சோனு சூட் மீது போலீசில் மும்பை மாநகராட்சி புகார்!

sharpana

அனுமதியின்றி கட்டிடம் கட்டியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

மும்பையின் ஜூஹூ பகுதியில் ’லவ் அண்ட் லட்’ என்ற பெயரில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டலை நடத்தி வருகிறார் சோனு சூட். குடியிருப்பு பகுதியில் இருக்கும் அந்த கட்டிடம் அனுமதி பெறாமல் இயங்கி வருகிறது என்பதை அறிந்த மாநகராட்சி அலுவலர்கள்  ஆறு மாடி கட்டிடத்தை மாநகராட்சியின் அனுமதியின்றி ஹோட்டலாக மாற்றியதாக சோனு சூட் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்”.

இதே தங்கும் விடுதி ஹோட்டலில்தான் கொரோனா ஊரடங்கின்போது ஊருக்குச் செல்ல முடியாமல் பரிதவித்த மக்கள் மற்றும் மருத்துவர்களை சோனு சூட் தங்கவைத்து உணவும் அளித்து உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் தடைப்பட்டனதங்கள் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த செலவில் ஊருக்கு அனுப்பி வைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டார்நடிகர் சோனுசூட்.

அதனையோட்டி உதவிக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாகஅவரது ட்விட்டர் பக்கத்தில் வைக்கப்பட்டு வருகிறதுசமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்ததுபெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளை தத்தெடுத்ததுரஷ்யாவில் தவித்து வந்த மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் இந்தியா அழைத்து வந்தது என்று அவரது சேவைகளின் பட்டியல் நீண்டுகொண்டேச் செல்கிறது. இப்போதும், தொடர்ச்சியாக தனது சமூக வலைதளங்களில் மருத்துவ, கல்விக்கான கோரிக்கை வைக்கும் மக்களுக்கு உதவி வருகிறார். இதற்காக, அவருக்கு கோவில் கட்டி அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.