சுதந்திர தினத்தையொட்டிய விடுமுறை நாட்களில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு திரையங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக மல்டிபிளெக்ஸ் அசோசியேஷனும், தயாரிப்பாளர்கள் கில்டும் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் வெளியான ரஜினியின் 'ஜெயிலர்', சன்னி தியோல் நடித்த 'கடார்-2', அக்ஷய் குமாரின் ’ஓ.எம்.ஜி-2’, சிரஞ்சீவியின் ’போலா சங்கர்’ உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கியுள்ளன.
இதன்காரணமாக, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை திரையங்குகளில் 2 கோடியே 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி, 390 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 100 ஆண்டுகளில் இல்லாத பாக்ஸ் ஆபீஸ் வசூல் என மல்டிபிளெக்ஸ் அசோசியேஷனும், தயாரிப்பாளர்கள் கில்டும் தெரிவித்துள்ளன.