கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பார்த்து, அவரை இந்தி படத்துக்கு தயாரிப்பாளர் போனிகபூர் சிபாரிசு செய்துள்ள தகவல் இப்போது தெரிய வந்துள் ளது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு பிறகு அவரது மார்க்கெட் ஜிவ்வென ஏறியிருக்கிறது. சர்கார், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2 என நடித்து வந்த கீர்த்தி, இப்போது இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் இந்தி ஹீரோ அஜய் தேவகன், ரஹீமாக நடிக்கி றார். அவர் மனைவியாக, நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். படத்தை அமித் சர்மா இயக்குகிறார். இவர், ஆயு ஷ்மான் குர்ரானா நடித்த ’பதாய் ஹோ’ என்ற இந்தி படத்தை இயக்கியவர். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ‘’இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. இது, எந்த குறிப்பிட்ட மொழி மற்றும் பகுதியைச் சேர்ந்த படம் இல்லை. ஆனால், உலகம் அறிந்து கொள்ள வேண்டிய பெருமைமிகு இந்திய படம். நான் சவலான கேரக்டர்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். என் முந்தைய படங்களைப் பார்த்தாலே இது தெரியும். இந்தப் படத்தின் கதையை என்னிடம் கூறியதும் உற்சாகம் ஆனேன். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது. இந்தப் படத்தில் இந்தி சினிமாவின் திறமையான சூப்பர் ஸ்டார் அஜய்தேவ்கனுடன் இணைந்து நடிக்கிறேன். அவருடைய பல படங்களை ஏற்கனவே பார்த்த்ருக்கிறேன்’’ என்றார்.
(அஜய்தேவ்கன் - போனி கபூர்)
அஜீத்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரிக்கும் போனி கபூர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவர் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’நடிகை யர் திலகம்’ படத்தைப் பார்த்தார். அதில், கீர்த்தி சுரேஷின் நடிப்பை ரசித்த அவர், இயக்குனர் அமித் சர்மாவுக்கு சிபாரிசு செய்துள்ளார். அவரும் அந்தப் படத்தை பார்த்துவிட்டு, கீர்த்தியை இந்தியில் அறிமுகமாக்க சம்மதம் தெரிவித்தார்.
போனி கபூர் கூறும்போது, ‘’தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெற்றிகரமான நடிகையாக கீர்த்தி இருக்கிறார். அவர் இந்தப் படம் மூலம் இந்தி யில் அறிமுகமாவது சிறப்பானது. இது மொழிகளைத் தாண்டிய சிறந்த படமாக இருக்கும்’’ என்றார். ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்தப் படத்தில் காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிகிறது.