ஆலியா பட்  முகநூல்
சினிமா

’45 நிமிடங்களுக்கு மேல் என்னால் கவனம் செலுத்தமுடியாது’ - ஆலியா பட்டுக்கு இப்படி ஒரு விநோத Disorderஆ?

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு Attention Deficit Disorder (ADD) நோய் இருப்பதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு Attention Deficit Disorder (ADD) நோய் இருப்பதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளராக வலம் வரும் மகேஷ் பட்டின் மகள்தான் ஆலியா பட். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், மிக இளம் வயதிலிருந்தே திரைத்துரையில் தனது பயணத்தை தொடங்கி ’ஸ்டார் கிட்’ என்ற அந்தஸ்தை பெற்றிருப்பினும், தனது சிறப்பான நடிப்பால் இன்று முன்னனி கதாநாயகியாக வலம் வருகிறார்.

மேலும், 'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் ஆலியா பட். தன்னைவிட 10 வயது மூத்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை மணந்த இவருக்கு தற்போது, பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இவ்வளவு சிறப்புக்கு சொந்தகாரரான ஆலியா பட் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிக்கு கொடுத்த பேட்டி யில், தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், ஒரு விஷியத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் தன்னால் கவனம் செலுத்த முடியாது என்று இவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ எனது திருமண நாளில் , எனது ஒப்பனை கலைஞர் புனித் பி. சைனி ஒப்பனைக்காக இரண்டு மணி நேரம் வேண்டுமென்று கேட்டார். ஆனால்,நான் அதை மறுத்துவிட்டேன். குறிப்பாக எனது திருமண நாளில் நான் எந்த பதட்டமும் இல்லாமல் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அழகிற்கான மந்திரமாக ஆலியா தெரிவிப்பது, “ எது நடக்க வேண்டும்மோ அது விரைவாக நடக்கவேண்டும். இதற்காக அதிக நேரம் செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

உண்மையில் அழகு என்பது உங்களைப்பற்றி நீங்கள் உணருவதுதான். பார்ப்பவரின் கண்களில்தான் அழகு இருக்கிறது.. அழகு என்பது உங்களின் கண்களிலேயே இருக்கிறது என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்.The way you perceive yourself is the way you project.” என்று தெரிவித்துள்ளார்.

ADD என்றால் என்ன?

இது ஒருவகையான கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறாகும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு ஒன்றில் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். விவரங்களை நினைவில் கொள்வது, வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றில் சிரமம் ஏற்படும்.