நயன்தாரா-விக்னேஷ் சிவன் மற்றும் தனுஷ் web
சினிமா

“குறுக்கு வழியில் விக்னேஷ் சிவன் முயற்சித்தார்..” உண்மையில் என்ன நடந்தது? போட்டுடைத்த பிஸ்மி!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மற்றும் தனுஷ் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி விளக்கமளித்துள்ளார்.

Rishan Vengai

NAYANTHARA BEYOND THE FAIRLYTALE என்கிற பெயரில் நயன்தாராவின் ஆவணப்படமானது வருகின்ற நவம்பர் 18ம் தேதி அதாவது அவரின் பிறந்தநாளன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த ஆவணப்படத்திற்கான ட்ரைலர் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியானது.

dhanush - nayanthara

இந்தநிலையில், இந்த ஆவணப்படம் தொடர்பாக, தனுஷ் மீது காட்டமான விமர்சனம் ஒன்றை நயன்தாரா இன்று முன்வைத்திருக்கிறார்.

தன் ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதிக்கவில்லை எனவும், அந்த படத்தில் இருந்து 3 நொடி காட்சியை பயன்படுத்த, தயாரிப்பாளரான தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

கடுமையாக தாக்கி பேசிய நயன்தாரா..

தனுஷ் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

தனுஷ் - நயன் தாரா

தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. உங்களின் கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது” என கடுமையான கருத்துகளை நயன் தாரா பகிர்ந்துள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது? பிஸ்மி விளக்கம்..

இந்நிலையில் உண்மையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் மற்றும் தனுஷ் விவகாரத்தில் என்ன நடந்தது என்று கூறியிருக்கும் பத்திரிக்கையாளர் பிஸ்மி, “NOC வாங்குவதற்கு விக்னேஷ் சிவன் குறுக்கு வழியில் முயற்சித்ததால்தான் தனுஷ் அதனை நிராகரித்தார், உண்மையில் நானும் ரவுடிதான் படத்தால் தயாரிப்பாளராக தனுஷுக்கு நஷ்டமே ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.

பிஸ்மி

இதுகுறித்து புதியதலைமுறையிடம் பேசியிருக்கும் பிஸ்மி, “நானும் ரவுதான் படத்தில் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டதால், படத்தை எடுப்பதை தாண்டி நயன்தாராவை கவர்வதற்காக பலவேலைகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டார். அதனால் ஏற்கனவே முடிவுசெய்த ஷுட்டிங் நாட்களை விட 30 நாட்கள் சேர்த்து ஷூட் செய்யும் வகையில் படம் சென்றுவிட்டது. இதுபோலான செயல்களால் படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டானது 4 கோடியிலிருந்து மொத்தமாக 22 கோடிக்கு சென்றுவிட்டது. அப்போதைக்கு விஜய் சேதுபதிக்கு இருந்த மார்கெட்டிற்கு 22 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தயாரிப்பாளரான தனுஷுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தியது. படம் வெளியாகி வரவேற்பை பெற்றாலும் ‘ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற விதத்தில்தான் தயாரிப்பாளரான தனுஷுக்கு அமைந்தது.

இதையெல்லாம் தாண்டி நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் காட்சிகளை வைக்க நேரடியாக வந்து அனுமதி கோரியிருந்தால், தனுஷ் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட்டு அனுமதி கொடுத்திருப்பார். ஆனால் அவரிடம் கேட்காமல் விக்னேஷ் சிவன் குறுக்கு வழியில் முயற்சித்ததால்தான் தனுஷ் NOC வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார்” என நயன்தாரா-விக்னேஷ் சிவன் தரப்பை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் பேசியவற்றை, கீழ்க்காணும் வீடியோவிலும் அறியலாம்: