2023ஆம் ஆண்டில் வெளியான ஏராளமான படங்கள் கமர்ஷியல் படங்களாகவே இருந்தன. லியோ, ஜெயிலர் போன்ற படங்கள் வசூல் ரீதியில் நல்ல வருமானத்தை பெற்றாலும், விமர்சன ரீதியில் எதிர்கருத்துகளை சந்தித்தன. போர்க்களத்தில் பூத்த மலர்களைப போல், சிறிய பட்ஜெட்டில் உருவான லவ் டுடே, குட் நைட், டாடா உள்ளிட்ட படங்களுக்கும் மக்கள் வரவேற்பு அளித்தனர். கமர்ஷியல் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய திரை விம்ர்சகர் பிஸ்மி, “வெறுமனே கமர்சிஷியல் நோக்கம் என்று மட்டுமே பார்க்காமல், நம்மை வாழ வைக்கிற நாம் இயங்குகிற இந்த துறைக்கு நம் மூலமாக ஒரு பெருமை கிடைக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தால் நிச்சயமாக நல்ல படங்களை எடுப்பதற்கு முன்வருவார்கள். அத்தைகைய முயற்சிகள் 2024 ஆம் ஆண்டு நடக்கும் என ஆசைப்படுகிறோம்” என தெரிவித்தார்.
நல்ல படங்களைக் கொண்டாட மக்கள் தயாராக உள்ள நிலையில், வன்முறையை கொண்டாடும் படங்களை மட்டுமின்றி உணர்வுகள் பேசும் சினிமா உருவாக வேண்டுமென்பதே ரசிகர்களின் விருப்பம்