விஜய் சேதுபதி pt web
பிக்பாஸ்

பிக்பாஸ் தொகுப்பாளராகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி...?

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

PT WEB

விஜய் டிவியில் 7 சீசன்களை கடந்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. 7 சீசன்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, நிகழ்ச்சியின் ஐகானாக திகழ்ந்த கமல்ஹாசன் பிக்பாஸ் பயணத்தில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார்.

Simbu-kamal

இதுதொடர்பாக கமல் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சினிமா பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னால் தொடர இயலாது. விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவதில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரும் சீசன் மற்றொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

பிக்பாஸில் விஜய் சேதுபதி

இதையடுத்து பிக் பாஸின் அடுத்த சீசனை தொகுத்து வழங்கும் பிரபலம் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு பிக்பாஸ் ரசிகர்களின் மனதிலும் எழுந்தது. கடந்த 7 சீசன்களை பொறுத்தவரை, கமல் பங்கு பெறாத சில பிக்பாஸ் எபிசோட்களை நடிகர் சிம்புவும், நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடத்தியிருந்தனர். ஆகவே அடுத்த சீசனை அவர்கள் தொகுத்து வழங்குவர் என்ற செய்திகள் வந்தன. இடையே நடிகர் சரத்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக செய்திகள் வருகின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.