பிரதீப் vijay tv
பிக்பாஸ்

”இவரு எனக்கு எக்ஸிட் கொடுக்குறாராம்..” - பிறந்தநாள் வாழ்த்தில் கமல்ஹாசனை வம்புக்கு இழுத்த பிரதீப்!

Jayashree A

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 : ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றிய கமலுக்கு எக்ஸ் தளம் வழியாக பதில் சொன்ன பிரதீப்

சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரையில் தோன்றும் நாள், பிக்பாஸ் வீட்டினுள் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்டும், நியாயத்தை பாராட்டியும் கூடுதலாக ஒரு புத்தக பரிந்துரையும், கொஞ்சம் அரசியலும், நிறைய தத்துவங்களையும் உதிர்த்துச் சொல்ல வந்ததை ரத்தின சுருக்கமாகச் சொல்லிச்செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். கமலின் இத்தகைய நடவடிக்கைகளால் சனி ஞாயிறு தினங்களில் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரதீப்பால் தாங்கள் பாதிப்பு அடைவதாகவும், பெண் போட்டியாளருக்கு அவரால் பாதுகாப்பில்லை என்றும் இதர பிக்பாஸ் போட்டியாளார்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, கமல்ஹாசனால் ரெட்கார்ட் பெற்று சென்ற வாரம் பிக்பாஸை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிரதீப்பிற்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை என்றும், அவர் வெளியேற்றப்பட்டது தவறு என்றும் பல்வேறு தரப்பினர் அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று அவரை வாழ்த்தும் விதமாக பிரதீப் தனது x தளத்தில், “உங்களுக்கு இன்று 69வது பிறந்த நாள். தமிழ் சினிமாவுக்கு உங்கள் கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. லவ் யூ ” என்று குறிப்பிட்டு கீழே அவர் நடித்த வசூல்ராஜா MBBS படத்திலிருந்து ஒரு காட்சியை பதிவிட்டுள்ளார்.

அதில் கமல் பிரகாஷ் ராஜை நோக்கி “இவரு எக்ஸிட் கொடுக்குறாராம் எனக்கு, நான் எண்ட்ரி கொடுக்குற ஆளு..” என்று அங்கிருக்கும் பொருட்களை வீசி எறிகிறார். பிறகு... ”ஐய்யய்யோ.. இப்படி யாராவது வேணும்னு செய்வாங்களா.... ஆனா நா வேணும்னு தான் செய்வேன். இது நம்ம ஸ்டைல்” என்று பிரகாஷ் ராஜை வம்பிழுப்பார்.

அதாவது, கமல் பிரதீப்பிடம் ரெட் கார்ட் கொடுப்பதற்கு முன் அவரிடம், ”நீங்க பாத்ரூம் கதவை ஏன் திறந்து வைத்து பாத்ரூம் போனீங்க.. “ என்று கேட்டதற்கு, “நான் வேணும்னு தான் செய்தேன்” என்று பிரதீப் கூறியிருப்பார்.

இதை மறுபடியும் கமலுக்கு நியாபகப்படுத்தவே போடப்பட்ட ஒரு ட்விட் என்றும் கமலை வம்பிழுக்கவே பிரதீப் இப்படி ஒரு ட்விட் போட்டதாகவும் பலரும் கூறிவருகின்றனர். இந்தப் பதிவு அவர் இணைத்த #TheeraVisaripatheMei என்ற ஹேஷ்டேக் தான் இங்கு முக்கியமானது. அதாவது, தனக்கு அளிக்கப்படட் ரெட் கார்டு தீர விசாரிக்காமல் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அத்துடன் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு நன்றி கூறி கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.