பிக்பாஸ் 7 விஜய் டீவி
பிக்பாஸ்

பிக்பாஸ் 7: ‘பருவம்’ என்ற வரலாற்று நாவலை பரிந்துரை செய்த கமல்ஹாசன்; ’இது இதிகாசம் அல்ல வரலாறு’!

”விஞ்ஞானம் மனிதனுக்கு நண்பனாக இருக்கவேண்டும்” என்ற உரையாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் கமல்.

Jayashree A

பிக்பாஸ் - 77ம் நாள்!

”விஞ்ஞானம் மனிதனுக்கு நண்பனாக இருக்கவேண்டும்” என்ற உரையாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் கமல்ஹாசன். பிறகு அகம் டீவியின் வழியாக அகத்திற்குள் சென்று போட்டியாளர்கள் மற்றவர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை கூறச் சொல்கிறார். இப்படி ஒரு பதினைந்து நிமிடங்கள் ஓடிவிடுகிறது. இதில் போன வாரம் எதிரியாக இருந்தவர்கள் இந்தவாரம் நண்பர்களாக மாறுகின்றனர். இதில், "அவர்களின் மனமாற்றம் இருக்கலாம் ஆனால் அவர்களின் குணம் மாறாது ஏனெனில் அது அவர்களின் DNA சம்பந்தப்பட்டது" என்றார் கமல்.

பிறகு மணியின் கேப்டன்சியை பற்றி அனைவரும் நன்றாகவே இருந்தது என்றும், இவரது கேப்டன்சியில் தான் நிறைய FUN இருந்தது என்றும் கூறுகிறார்கள். பிறகு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும், சுயநலம், அன்பு, சகிப்புத் தன்மை, விடாமுயற்சி, திறமை இவற்றின் ரேஷியோ என்ன என்பதை பற்றி கேட்கிறார். இதில் அவரவர்கள் தங்களை பற்றி கூறுகிறார்கள். இதில் ஒரு பதினைந்து நிமிடங்கள் கரைகின்றன.

பிறகு இடைவேளைக்குபிறகு வந்த கமல், நாமினேசனை டிஸ்கஸ் பண்ணாதீங்க என்று சொன்னாலும் நீங்க க்ரூப் க்ரூபா டிஸ்கஸ் செய்றீங்க... நீங்க நாமினேட் மட்டும் தான் செய்யமுடியும், எலிமினேட் பண்றவங்க மக்கள் தான் அதை நீங்க புரிஞ்சுக்கல... என்று கொஞ்சம் கடுமையாக பேசியவர், விக்ரமை மாயா காக்ரோச் என்று கூறியதை கடுமையாக சாடினார். நீங்க Fun-ஆக வைக்கின்ற பெயர் அவருக்கு நிரந்தரமாகிடும். அது தவறு என்று அனைவரையும் கமல் திருத்துகிறார்.

புத்தகப் பரிந்துரை - ‘பைரப்பா’

” கன்னட எழுத்தாளர் எழுதிய ’பைரப்பா’ என்ற ஒரு அற்புதமான நாவலை தமிழில் ’பருவம்’ என்ற நாவலாக பாவண்ணன் மொழிபெயர்த்துள்ளார். இது மகாபாரதம் நடந்த இடத்தை ஆராய்ச்சி செய்து அதை புராணமாக சொல்லாமல் சரித்திரமாக சொல்லும் அற்புத படைப்பாகும்“

என்று புத்தகபரிந்துரையுடன் நேற்றைய எபிசோட்டை முடித்துக்கொண்டார். இனி என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.