பிக்பாஸ் 7 விஜய் டீவி
பிக்பாஸ்

பிக்பாஸ் 7: ”என்னை புரட்டிபோட்ட புத்தகம்”- கமல்; ”இளம் தலைமுறையினருக்கு வழிவிடுகிறேன்”-விசித்திரா!

”lateral thinking இந்த சொல்லுக்கு சொந்தகாரர் Edward de Bono ” கமல்ஹாசன்.

Jayashree A

98 வது நாள்!

கமல்ஹாசன் அரங்கத்திற்கு அதிரடியாக வருகிறார். வந்த வேகத்திலேயே அகம் டீவி வழியாக அகத்திற்குள் செல்கிறார். இவரை பார்த்த போட்டியாளர்கள் ஆசிரியர்களைக் கண்ட மாணவர்களைப் போல ஒருவித பயத்துடனே எழுந்து நிற்க... ”உங்களுக்குள் இருக்கும் usp (unique selling point) என்ன?” என்று போட்டியாளரை கேட்கிறார்.

தினேஷ் எழுந்து, “மணிக்கு அவரின் நடனம் அவருக்கு usp. விஷ்ணுக்கு பிக்பாஸ் கேம் மீது இருந்த focused அவருக்கு usp. அர்ச்சனாவுக்கு அவரது பாட்டு usp. விஜய்யின் டான்ஸ் அவருக்கு usp. விசித்திரா மேம்க்கு அவரது கெத்து usp. மாயாவுக்கு அவரது மூளைதான் அவங்களுக்கு usp.” என்கிறார்.

தினேஷுக்கு ”விடாமுயற்சி அவரின் usp” என்கிறார் மணி. இப்படி ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்களின் வலிமையை பற்றி கூறுகின்றனர்.

கமல் தனது அடுத்த கேள்வியாக, ”நீங்க வெளியில இருந்திருந்தால் பிக்பாஸ் வீட்டில் யாருடைய fan ஆக இருந்திருப்பீர்கள் ?” என்ற கேள்விக்கு தினேஷ், மாயாவின் fan என்றும், மணியும், விஷ்ணுவும் தினேஷிற்கு fan என்றும் கூறுகிறார்கள். அர்ச்சனா, விஜய், விசித்திரா மூவரும் மாயாவின் fan ஆக இருப்பதாக கூறினர். மாயா விசித்திராவின் fan என்று சொல்கிறார்.

இப்படி சில கேள்விகளை கேட்டதுடன் இந்தவாரம் வெளியேறுபவர் விசித்திரா என்ற கார்டை கமல் காட்டியதும், விசித்திரா சற்று அதிர்ச்சியானார். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பிக்பாஸை விட்டு வெளியேறினார். வெளியேறும் முன், ”இளம்தலைமுறையினருக்கு வழி விட்டுவிட்டேன்” என்று தினேஷிடம் சொல்லி செல்கிறார். இவர் இப்படி சொல்லியதற்கு ஒரு காரணமும் உண்டு. தினேஷ் விசித்திராவிடம் ஒரு பிரச்னையின் போது, “மேம் நீங்க இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு வெளியே போனா நல்லாயிருக்கும்” என்று தினேஷ் சொன்னதை நியாபகம் வைத்தவராய் அதை மீண்டும் தினேஷிடம் நினைவுகூறினார் விசித்திரா.

இவரைப்பொருத்தவரை டைட்டில் வின்னராகாவிட்டாலும் பரவாயில்லை தினேஷுக்கு பின்னர் தான் வெளியேறவேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் தினேஷ் வீட்டிற்குள் இருக்க இவர் வெளியேறியது அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புத்தக பரிந்துரை

”இந்த புத்தகத்தை நான் 20 வது வயதில் படித்தேன். என்னை புரட்டி போட்ட ஒரு புத்தகம் என்று சொல்லலாம். lateral thinking இந்த சொல்லுக்கு சொந்தகாரர் Edward de Bono எழுதிய PO: Beyond Yes & No” என்ற புத்தகத்தை பரிந்துரைத்தார். இவர் thinking என்ற பாடத்தை ஆக்ஸ்போர்டில் கற்று கொடுத்தவர். என்று கூறிய கமல் விசித்திராவிடம் பேசி அவரை வழியனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் சீசன் 7 முடிவடைவதற்கு இனும் இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் யார் டைட்டிலை பெறுவார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.