பிக்பாஸ் 7 vijay tv
பிக்பாஸ்

பிக்பாஸ் 7: ”வீட்டில் என் அம்மாவிடம் சண்டை போட்டிருக்கேன்; என் அப்பாவை தொட்டுகூட பார்த்ததில்லை” கமல்

பிக்பாஸ் வீட்டில் ரவீனா, மணி ஜோடியை தொடர்ந்து, நிக்சன், ஐஷு ஜோடியை பற்றி அதிகமாக பேசப்பட்டது. ஆனால் ஐஷு பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்னர், தற்போது விஷ்ணு பூர்ணிமாவை ஜோடியை பற்றி அதிகம் பேசப்படுகிறது.

Jayashree A

பிக்பாஸ் 83 வது நாள்

சனிக்கிழமையன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டினருடன் உரையாட வந்ததும், விவசாயத்தை பற்றியும், கரம்சிங் அவர்கள் விவசாயத்திற்காக குரல் தந்ததையும் நினைவுகூர்ந்து, அகம் டீவி வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்.

இதற்கு முன்னதாக மாயா, பூர்ணிமா க்ரூப் அர்ச்சனாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததை காட்டினர். “அர்ச்சனா பூர்ணிமாகிட்ட சொல்றா, பிரட் எடுத்து வை.. ஜாம் எடுத்து வை.. நான் வந்து பிரிப்பேர் பண்ணிக்கிறேன்"னு... எனக்கு சிரிப்புதான் வந்தது. ஏன் அவங்க எடுத்துக்கமாட்டாங்களா? இவங்களுக்கு வேலை செய்ய ஒரு தனிகேங் வேணும்” என்று மாயா கூறியதும், ரவீனாவும் ”ஆமா அவங்க அப்படிதான் செய்றாங்க...” என்கிறார். பெண்களில் சிலர் கூடினால் வம்புதான் பேசுவார்கள் என்பதை இவர்கள் கேங் அடிக்கடி நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.

பூர்ணிமாவுக்கு விஷ்ணுமேல் க்ரஷ் உண்டா?

பிக்பாஸ் வீட்டில் ரவீனா, மணி ஜோடியை தொடர்ந்து, நிக்சன், ஐஷு ஜோடியை பற்றி அதிகமாக பேசப்பட்டது. ஆனால் ஐஷு பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்னர், தற்பொழுது விஷ்ணு பூர்ணிமா ஜோடியை பற்றி அதிகம் பேசப்படுகிறது.

மாயா, பூர்ணிமாவிடம் விஷ்ணுவை பற்றி கேட்டதற்கு, ” எனக்கு வயது ஒரு பெரிய மேட்டரே இல்ல... ஆனால் அவரின் குணம் எனக்கு செட் ஆகாது, லைப்ல பிரச்னை வரலாம். ஆனால் பிரச்னையே லைப்பா இருந்தா நல்லா இருக்காது “ என்று விஷ்ணுவின் மேல் தனக்கு ஏதும் க்ரஷ் இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்.

அகம் டீவி வழியாக அகத்திற்கு வந்த கமல்

இதை பற்றி கமல் ஏதாவது சொல்லுவார் என நினைத்தால், வீட்டிற்கு வந்த விருந்தினரை பற்றிய பேச்சை எடுக்கிறார், “இந்த தலைமுறையினர் காட்டும் பாசம் கொஞ்சம் அதிகப்படியாக இருப்பதைப்போல் எனக்கு தோன்றுகிறது. நான் உங்களைப்போல் பாசமாக இருந்ததில்லை. என் வீட்டில் என் அம்மாவிடம் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன். ஆனால் அப்பாவை நான் தொட்டுகூட பார்த்ததில்லை.

என் அம்மா பிழைப்பது கடினம் என்று டாக்டர் சொன்ன சமயம், என் அப்பாவின் கால்கள் சற்று நொடித்து, அவர் தடுமாறிய சமயம் அவரை நான் தாங்கிபிடித்தேன். அப்பொழுதுதான் அப்பாவின் கைஆம்ஸின் அளவே எனக்கு தெரியும். என்னை என் விருப்பப்படி என் வழியே விட்டனர். குழந்தைக்கு அப்பா அம்மாவின் தேவை இருக்காமல் அவர்களை வளர்ப்பதுதான் பேரண்டிங்” என்கிறார்.

இப்படி அனைவரின் உணர்வுகளை கேட்டுத் தெரிந்துகொண்டவர், ”ஒருவர் சொல்லும் அறிவுரையில் நமக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் பகுத்தறிவு என்பது ஆன்மிகத்திற்கு மட்டும் அல்ல, அடுத்தவர் கூறும் அறிவுரைக்கும் தேவை. அதில் நமக்கு நல்லது எது என்பதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று நச்சுன்னு நாலுவார்த்தை கூறினார்.

பாலசந்தர் சார் நினைவுநாளை முன்னிட்டு கமல் அவரை பற்றி அதிகமாகவே பகிர்ந்துகொண்டார். ”பாலசந்தர் என்னிடம் இதை இப்படி பண்ணு , அதை அப்படி பண்ணு.. என்று என்னை மெருகேற்றினார். அவரிடம் நான் நிற்கும் சமயத்தில் அவர் எனக்கு ஆசானாகவும் நான் மாணவனாகவும்தான் இருப்பேன். என்னை என்னென்னமோ சொல்லி திட்டுவாரு.. பயங்கரமா கோவம் வரும் அவருக்கு. ஆனால் அவருக்கு கோபம் எதனால் வருகிறது என்பதை புரிந்துகொண்டதனால் நான் அவருக்கு அடிப்பொடி. இன்று மட்டும் அல்ல... எனக்கு தினமும் அவரின் நினைவுநாள்தான். எனக்கு அவர் அப்பா மாதிரி.” என்றார்.

மேலும் சில யூடியூப் சானல்களின் திரை விமர்சனத்தை பற்றி அவர் பேசும்போது, ”இப்பொழுது படத்தின் ரிவ்யூ என்ற பெயரில் சில யூடியூப் சானல்கள் படம் பார்த்து வெளி வருபவர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “படம் ஒரு தடவை பார்க்கலாம், ரெண்டு தடவை பார்க்கலாம் என்று அசால்டாக சொல்லிட்டு போவாங்க. படம் எடுத்தவனுக்கு தெரியும் இது நல்ல படமா இல்லையான்னு,” என்று சில யூடியூப் சானல் குறித்த தனது பார்வையையும் வெளிப்படுத்தினார்.