Bigg Boss Day 17 Bigg Boss
பிக்பாஸ்

BIGG BOSS DAY 17 | ஐஷூ கொடுத்த அட்வைஸாலதான் அக்‌ஷயாவுக்கு சாபக்கல் கிடைத்ததா?

Jayashree A

பிக்பாஸ்ஸில் 17ம் நாளான நேற்று, ‘கடந்து வந்த பாதை’ பற்றிய டாஸ்க் நடந்தது. போட்டியாளார்கள் அனைவரும் வாழ்க்கையில் தாங்கள் கடந்து வந்த காலத்தை பற்றி தனித்தனியாக பேசினார்கள். இதில் அக்‌ஷயா வெற்றிபெற்று கோல்ட் ஸ்டார் வாங்கினார்.

Akshaya Udayakumar

அக்‌ஷயாவும், வினுஷாவும்தான் போரிங் கண்டஸ்டண்ட் என்றும், அதனால் இவர்கள் இருவருக்கும் சிறை தண்டனை வழங்குவதாகவும் பிக்பாஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆனாலும் இருவரையும் ஒருவாரம் மன்னித்து விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்குள் அக்‌ஷயா அனைவரின் கவனத்தையும் பெரும் வகையில் பாட்டு பாடி கதை சொல்லி விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, உச்சகட்டமாக நேற்றைய டாஸ்க்கில் கோல்ட் ஸ்டார் வென்று பிக்பாஸையே ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்.

இதனால் அக்‌ஷயா மற்ற போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு அறிவுரை சொல்லுமாறு பிக்பாஸ் அறிவுறுத்தினார். அக்‌ஷயாவை சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க, அக்‌ஷயா ஒவ்வொருவருக்கும் அவர்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை விளக்கினார்.

Akshaya Udayakumar

இதில் ஐஷூ பற்றி அக்‌ஷயா சொன்னது முக்கியமானது. ஐஷூ தன்னைப்பற்றி டாஸ்க்கில் கூறும்போது, “நாம எதுக்கு கஷ்டப்பட்டு எல்லோரையும் எதிர்த்துக்கிட்டு நம்ம வழியில போகனும்” என கூறியிருந்தார். அதை நினைவுபடுத்திய அக்‌ஷயா, “ஐஷூ, நம்மோட அப்பா அம்மாவுக்கு நாம் இன்னமும் குழந்தைதான். குழந்தைங்க கஷ்டப்படுவதை அவங்க தாங்கிக்க மாட்டாங்க... அதனால அப்பப்போ அறிவுரை சொல்லுவாங்க. அதே சமயத்துல நாம யார்னு அவங்களுக்கு ப்ரூஃப் பண்ணி காட்டனும். அதுக்கு நாம கஷ்டப்பட்டாலும் பரவயில்ல. பொண்ணா பிறந்திருந்தாலும் எங்களாலயும் முடியும் என்று நாமதான் ப்ரூஃப் செய்து காட்டனும்” என்று கூறினார்.

அக்‌ஷயா சொல்வதும் உண்மைதான், பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் பெற்றவர்களுக்கு அவர்கள் குழந்தைதான். குழந்தைகளுக்கு அனுபவ முதிர்ச்சி இருக்காது என்பது பெற்றவர்களின் கணிப்பு. அதை குறை கூற முடியாது. அதே சமயத்தில் குழந்தைகள் தாங்கள் விரும்பியதை பல சங்கடங்களுக்கு இடையில் செய்து காட்டி வெற்றி பெற்றார்கள் என்றால் பெற்றவர்களுக்கு அதைவிட மகிழ்சியான செய்தி வேறெதுவும் இல்லை. இதைதான் அக்‌ஷயாவும் ஐஷூக்கு அறிவுரையாக கூறினார்.

Akshaya Udayakumar

தொடர்ந்து கூல் சுரேஷை பற்றி கூறும்பொழுது, “அண்ணா ஒருத்தரை கலாய்ப்பது வேற, காமெடி செய்வது வேற, நீங்க காமெடி செய்கிறேன் என்று அடுத்தவர்களின் உருவ அமைப்பை கேலி செய்வது காமெடி கிடையாது” என்கிறார்.

“சினிமாவில் இதுபோல் வரும்பொழுது ரசிக்கிறோமே” என்று சுரேஷ் கேட்டபொழுது, “அதுவும் தவறுதான்” என்றார்.

Cool suresh - Vijay

இப்படி பலருக்கும் அறிவுரை செய்தார் அக்‌ஷயா.

‘அக்‌ஷயா... பிக்பாஸை நம்பாதீங்க... உங்களுக்கு வேறொருத்தர் மூலமா அறிவுரை சொல்ல வச்சிருப்பாரு. பார்த்து சூசகமா விளையாடுங்க’ என்று நமக்கு மைண்ட் வாய்ஸ் வந்தது. அப்போதுதான் சாபக்கல் டாஸ்க் வந்தது. இதை பற்றி நேற்றே கொஞ்சம் பார்த்து இருந்தோம்.

நேற்று பார்த்த சாபக்கல் சுரேஷிடமிருந்து மணி, ரவீனாவிடம் சென்று மீண்டும் சுரேஷிடம் வந்து, இறுதியாக அக்‌ஷயாவிடம் வந்தது.

நமக்கு, ‘பார்தீங்களா அக்‌ஷயா உங்களிடம் அறிவுரை பெற்றவங்க கையாலேயே உங்களுக்கு சாபகல்லை கொடுக்க வச்சிட்டாரு... அதுதான் பிக்பாஸ்’ என்று தோன்றியது.

Akshaya Udayakumar

சாபக்கல்லை பெற்ற அக்‌ஷயா, பெட்டி படுக்கையுடன் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு வந்து விட்டார். அவர் கல்லை கீழே வைக்கக்கூடாது, தவறுதலாக கல்லை கீழே வைத்தால் அதற்கடுத்த வாரமும் அக்‌ஷயாவின் பெயர் ஓட்டு போடாமலே நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறும் என்று பிக்பாஸ் கூறவே, கையில் கல்லுடன் கிச்சனில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார் அக்‌ஷயா.

மீண்டும் நாளை பிக்பாஸ் வீட்டில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.