biggboss7 vijay tv
பிக்பாஸ்

பிக்பாஸ்7: ”அழலையா?” - மாயாவின் நக்கலான பேச்சும், பிரதீப்-க்கு ஆதரவாக விசித்திராவின் புலம்பலும்!

Jayashree A

36ம் நாள் காலை அமர்க்களத்துடன் ஆரம்பித்தது பிக்பாஸ் வீடு. மாயா வீட்டின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆறு நபர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் கூறியதுடன், மாயா தான் ஏற்கனவே முடிவு செய்தபடி கூல் சுரேஷ், விசித்திரா, ரவீனா, மணி, தினேஷ் அர்ச்சனா இவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினார்.

மேலும், கையோடு வேலையை இவர்களுக்கு இது, என்று பிரித்துக்கொடுத்து, உணவு துறை அமைச்சராக ஜோவிகா, நிக்சன் சுகாதாறதுறை அமைச்சராகவும், ஐஷூ எண்டர்டென்மெண்ட் அமைச்சராகவும், விக்ரம் அக்‌ஷயா ஸ்டோர்ரூம் அமைச்சர் என்று இலாக்கா படி பிரித்துக்கொடுத்தும் விட்டார்.

இதில் இந்தவார மளிகைசாமான் பொருட்களை எடுக்க அர்ச்சனாவும், மாயாவும் சென்றனர். ஆனால் எண்ணெய் எடுக்க மறந்து வந்தனர்.

அடுத்ததாக நாமினேசன் பிராசஸ்...

இரு வீட்டினரிடையே நாமினேசன் பிராசஸ் நடைபெற்றது. இதில் இந்தவாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் தினேஷ், விசித்திரா, அர்ச்சனா, ஐஷு, பூர்ணிமா ப்ராவோ. ஆனால், கமல் நேற்று கூறும் பொழுது சிலர் நாமினேஷனை தவறாக பயன்படுத்தவதால், இனி நீங்கள் நாமினேஷன் நபர்களை தேர்வு செய்ய முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் எப்பவும் போலவே நாமினேசன் நபர்களை போட்டியாளர்கள் தான் தேர்வு செய்தனர். இதில் ஏன் இந்த குழப்பம் என்பது தெரியவில்லை.

விசித்திராவின் குழப்பம்:

ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் விசித்திராவுக்கு பிரதீப் வெளியே சென்றதை ஜீர்ணயிக்க முடியவில்லை. அடிக்கடி அவரைப் பற்றி பேசுகிறார். ”ஐஷூவிடம் பிரதீப் தவறாக பேசி இருந்தால், உடனடியாக நிக்சன் அவனிடம் இது பற்றி கேட்டு இருக்கவேண்டும், ஏன் விட்டார்கள்? என்னைப் பொருத்தவரை, நீங்கள் எல்லோரும் சொல்வதைப்போல் பிரதீப் பெண்களுக்கு எதிரானவன் இல்லை. காலையில் எல்லோர் எழுந்திரிக்கும் முன்பாக, இரவு வெகுநேரம் கழித்துக்கூட நான் பிரதீப்புடன் தனிமையில் அமர்ந்து தான் பேசி இருக்கிறேன். அவன் தப்பானவன் இல்லை....” என்று சர்டிபிகேட்ஸ் தந்ததுடன் மட்டுமல்லாமல் ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்களிடம் புலம்பி தள்ளுகிறார்.

ஆனால் ரவீனா இந்த வாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பெண்களுக்கு எதிரானவர் தான் என்கிறார்.

“நான் அவரை யோக்கியமானவன்னு சொல்லலை; ஆனால் அவர் நல்லவன் தான். ஒரு பெண்ணிக்கு மானபங்கம் நடக்கிறது என்றால் அவள் இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளிக்கவேண்டும். மாறாக அதை ஆறப்போட்டு காலம் கடந்து சொன்னால் சாட்சியங்கள் அழிந்துவிடும்” என்கிறார். இதை தவறாக நினைத்துக்கொண்ட ரவீனா, விசித்திரா பிரதீப்பிற்கு சப்போர்ட் செய்வதாக மாயாவிடம் தெரிவிக்கிறார்.

மாயா இந்த விஷயத்தை பெரிதாக்கி இந்த வாரம் விசித்திரா அர்ச்சனா, தினேஷிற்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பப் போவதாக கூறி வருகிறார்.

அர்சனாவை கிண்டலடிக்கும் மாயா

அர்ச்சனாவுக்கும் மாயாவுக்கும் நடந்த சண்டையில் மாயா அர்ச்சனாவை பார்த்து, “i want go home-னு சொல்லிட்டே இருக்கீங்களே போகவேண்டியது தானே.. ஏன் இன்னும் இங்கேயே நின்னுகிட்டு இருக்கீங்க.. போய் அழலையா? என்று நக்கல் செய்வதெல்லாம் அவருக்குள் இருக்கும் குணத்தை காட்டுகிறது.

இப்படி விவாதங்கள் வீட்டிற்குள் தொடர.. நேற்றைய எபிசோட் அருமையாகவே இருந்தது எனலாம்.