பிக்பாஸில் 48ம் நாளான கடந்த சனிக்கிழமை விசித்திராவும், அர்ச்னாவும் சிறைக்கு செல்லமாட்டோம் என்றபடி கார்டன் ஏரியாவில் தங்கினர். இதைப்பார்த கேப்டன் தினேஷ் அவர்களிடம் வந்து, “நீங்க சிறைக்கு செல்லமாட்டீர்கள் என்றால் நீங்கள் வீட்டிற்குள் வரக்கூடாது. இங்கேயேதான் படுத்துக்கொள்ள வேண்டும்” என்றார். அதற்கு விசித்திராவும் அர்ச்சனாவும், “சரி, இங்கேயே இருந்துக்கொள்கிறோம்” என்று அங்கேயே படுத்தும் விட்டனர். கேப்டன் தினேஷ் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக (நமக்கு அப்படித்தான் தெரிந்தது) அவரும் பாயுடன் கார்டன் ஏரியாவுக்கு வந்து படுத்துவிட்டார்.
தினேஷ் வந்ததைப்பார்த்த மணியும் ரவீனாவும் கார்டன் ஏரியாவுக்கு வந்து படுத்துவிட்டனர். இவர்கள் வந்தால் மாயாவும் பூர்ணிமாவும் சும்மா இருப்பார்களா? அவர்களும் வந்துவிட்டார்கள். இதைப்பார்த்த விசித்திராவும் அர்ச்சனாவும் தங்களைப்பார்த்து இவர்கள் கண்டெண்ட் செய்கிறார்கள் என்று நினைத்து, ‘இதுக்கு நாங்களே ஜெயிலுக்கு போறோம்’ எனக்கூறி ஜெயிலுக்கு சென்றுவிட்டனர்.
இதன் நடுவில் விசித்திராவுக்கு ஆதரவாக பூர்ணிமா தினேஷிடம் வந்து பேச... தினேஷ் பூர்ணிமாவிடம், “நான் கேப்டன், இதை நான் பார்த்துக்கொள்கிறேன். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி பூர்ணிமாவின் மூக்கை உடைத்தார்.
இத்தனை நாட்களாக உடன் பிரியா தோழியாக வலம் வந்த மாயா, பூர்ணிமாவிற்கு இடையில் தினேஷால் சிறு விரிசல் விழ ஆரம்பித்தது.
மாயா ‘தினேஷ் கேப்டன்ஷிப் சரி’ என்றும் பூர்ணிமா ‘தினேஷின் கேப்டன்ஷிப் தவறு’ என்றும் சொல்கிறார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ப்ராவோ இவர்களுடன் வந்து அமர்ந்துக்கொண்டு, பூர்ணிமா பேசுகையில் சிரித்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பூர்ணிமா காண்டாகி மாயாவிடம், “நீங்க பேசுறதுக்கு சரின்னு சொல்ல ஆள் எல்லாம் வச்சுருக்கீங்க... ” என்று சொல்லவும் இருவருக்கும் இடையிலான நட்பில் மேலும் விரிசல் விழ ஆரம்பித்தது.
இதன்பிறகு கமல்ஹாசன் வந்து அகம் டிவி வழியாக அகத்திற்குள் இருந்தவர்களிடம் பேசினார். “உன்னைப்போல் ஒருவன் டாஸ்ல்கில் உங்களைப்போல் மற்றொருவர் செய்ததில் எது நன்றாக இருந்தது, எது நன்றாக இல்லை என்பதை வரிசையாக சொல்லுங்கள்” என்றதும், அவரவர்கள் தங்களைப்பற்றி பரிமாரிக்கொண்டனர். இதில் கானா பாலாவைப்போல் பூர்ணிமா கெட்டப் போட்டு இருந்திருப்பார். “பூர்ணிமாவும், நானும் முகஜாடையில் ஒரேமாதிரி இருப்பதால் பூர்ணிமா எனது கெட்டப்பை போட ஆசைப்பட்டு இருப்பார்” என்று பூர்ணிமாவை கூறினார் கானா பாலா.
அர்ச்சனா பேசும்பொழுது, “நமது அப்பா நம்மை திட்டும்பொழுது அப்பா அப்பாதானே? அவருக்கு உரிய மரியாதையை நாம் கொடுத்தே ஆகவேண்டும். ஆக மரியாதை என்பது நாம் கொடுத்தே ஆகவேண்டும்” என்றார்.
விசித்திரா பேசும்பொழுது “ஒரு நடிகனைப்பற்றி வீட்டில் பேசும்பொழுது அவன், இவன் என்று கூறுவர். அதே நடிகனை வெளி இடங்களில் சந்தித்தால், அவர் இவர் என்றுதான் கூறுவர். இதுதான் அடிப்படை. மரியாதை என்பது மிக அவசியம்” என்றார்.
இப்படி அனைவரும் தங்களின் கருத்தை கமலிடம் தெரிவித்தார். இத்துடன் அன்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.