விஜய் சேதுபதி முகநூல்
சினிமா

“பிக்பாஸ் தமிழ் சீசன் 8” | ஒரே 'Thug Life' சம்பவங்கள்தான்! போட்டியாளர்களை அலறவிட்ட விஜய் சேதுபதி!

பிக் பாஸ் சீசன் 8 நேற்றைய தினம் துவங்கிய நிலையில், ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கு ’Thug Life’ கொடுத்து போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளார் தொகுப்பாளரான விஜய் சேதுபதி.

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் “ பிக் பாஸ் சீசன் 8 “ நேற்று (7.10.2024) மாலை புது பொழிவுடன் தொடங்கியது.. கடந்த 7 சீசன்களையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கியநிலையில், 8 ஆவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.

முன்னதாக, பிக் பாஸ் சீசன் 8 ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய நிலையில், நேற்றைய தினம் போட்டியாளர்கள் யார் என்பது உறுதியானது.

இதன்படி,

  • தமிழ்சொற்பொழிவாளர் முத்துக்குமரன்,

  • நிகழ்ச்சி தொகுப்பாளர்களான - ஜாக்குலின் ,விஜே விஷால், தீபக்,

  • சின்னத்திரை நடிகர்கள் - அருண் பிரசாந்த், பவித்ரா ஜனனி, அக்‌ஷிதா, சத்யா, அர்னாவ்,

  • வெள்ளித்திரை நடிகர்கள் - ரவீந்தர் சந்திரசேகர், சௌந்தர்யா நஞ்சுண்டான், ரஞ்சித், தர்ஷிகா,

  • கானா பாடகர் ஜெஃப்ரி

  • குக்குவித் கோமாளி - சுனிதா, தர்ஷா குப்தா,

  • மகாராஜா படத்தின் சஞ்சனா என போட்டியாளர்களை ஒருவர் பின் ஒருவராக நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி வரவேற்றார்.

கமலுக்கு இணையாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் , அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீசன் துவங்கிய சில நிமிடங்களிலேயே விஜய் சேதுபதி... ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் என்றுதான் சொல்லவேண்டும்,

காரணம் , போட்டியாளர்களின் பதிலுக்கு விஜய் சேதுபதி கொடுத்த பதில், ”thug life" பதில்களாக இருந்ததுதான்..

அதன்படி,

போட்டியளர்களில் ஒருவரான ஜாக்குலின்,

" சார் என்ன எதாவது ஒரு பெரிய rowdy கிட்ட கூட்டிட்டு போக முடியுமா?”.. என்று கேட்டதற்கு,

“ பெரிய ரவுடி இல்ல.. உள்ள 17 ரவுடி இருக்காங்க... 18 ஆவது ரவுடி உள்ள போறீங்க.. உள்ள போய் நீங்க அடிச்சுக்கோங்க” என்று பேசினார்.

தொடர்ந்து, போட்டியாளர் ரஞ்சித்திடம் கேட்ட விஜய் சேதுபதி,

”நான் சின்ன வயதில் பார்த்த பீஷ்மர் என்ற படத்தில் மிகவும் நம்பிக்கை குரிய நண்பனின் முகமாக நீங்கள் இருந்திருந்தீர்கள்.. ஆனால், அந்த முகத்தை கவுண்டபாளையம் என்ற படத்தில் நான் பார்க்கவில்லை.. ஆக, இந்த படத்தில் வந்ததுதான் உங்கள் உங்களுக்கு இயல்பா. இல்லை நாங்க நினைச்சது வேறய்ய..” என்று கேள்வி எழுப்பினார். அதேபோல், ரஞ்சித் அங்கு வநந்திருந்த தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, நடந்த சம்பவமும் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

தொடர்ந்து, போட்டியாளர் அர்னவிடம், ’எப்படி உங்களுடைய விளையாட்டை விளையாட போகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு...

பதிலளித்த அர்னவ், “நான் எதற்கும் துணிந்து தான் வந்திருக்கிறேன். என்ன வேண்டும் என்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நாம ஒரு ஆம்பளையா இருந்துட்டு எதிலும் தோர்த்தா அசிங்கமாயிடும்.. என்று சொல்ல

இதனால், கோபமடைந்த விஜய் சேதுபதி, “என்ன சார் பேசுறீங்க? ஆம்பள, பொம்பள என்று பேசுறீங்க.. நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், உங்களுக்கு எதிரி உங்க வாய்தான் உங்க வாயால்தான் உங்களுக்கு பிரச்சனை வரப்போகிறது.” என்று வார்னிங் கொடுத்து அனுப்பினார்.

அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார்.. அவருக்கு விஜய்சேதுபதி நிறைய அறிவுரைகளை சொல்லி அறிமுகம் செய்தார். ஆனால்,பங்கேற்ற 24மணி நேரத்திலேயே அவர் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது..

இதில் போட்டியாளராக பங்கேற்ற கானா பாடகர் ஜெஃப்ரியிடம் ’நா பிக்பாஸ், கிரவுடு, சீசன் 8 ....இது எல்லாத்தையும் வெச்சு ஒரு பாட்டு கட்டு” என்று விஜய் சேதுபதி கேட்டதற்கு..

பாடிய ஜெஃப்ரி,

” எல்லோரையும் உள்ள வெச்சு பண்னிட்டாங்க லாக்கு..

உள்ளப்போய் பாத்தாத்தா அனைவருக்கும் ஷாக்கு..

கேரவன்ல குடுத்தாங்கப்பா black forest கேக்கு...

நியாயத்தை மட்டும் பேசும் சேது அண்ண மைக்கு.

ஒரு காலத்துல எங்க வீட்டுக்குள்ள ஒரு வேல சோத்துக்கு கஷ்டம்..

ஆனா இப்போ வந்து என் கதைய கேட்டா.. நா போடுற dress என் இஷ்டம்..

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் என் பணிவு.. அட இதுதாண்டா என்னோட பகுத்தறிவு..

போராடுவதுதான் என் துணிவு.. அட இதுதாண்டா என்னோட மனநிறைவு..

என்னோட கேஜிதான் 40 கேஜி ..அட வெளிய போய் பாத்தாதா ஃபேன் பேஜு” என்று லைவ்லையே அதிரடியாக பாடினார் ஜெஃப்ரி

இந்தவகையில், விஜய் சேதுபதி நிகழ்ச்சியை கையாண்ட விதத்தை கவனித்த பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான விக்ரமன், நடிகர் விஜய் சேதுபதிக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதில்,” சகோ விஜய் சேதுபதி @VijaySethuOffl நம்பிக்கை தந்து மிளிர்கிறார். இந்த சீசன் பிரம்மாண்ட வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள். பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துகள். ஆளும் ஆட்டமும் சிந்தனையும் புதுசு.” என்று பதிவிட்டுள்ளார்..

இப்படி ஆரம்பத்தையே அமர்க்களமாக தொடங்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்தநிகழ்ச்சியில் நல்ல ரீச் கிடைக்குமா? பிக்பாஸ் சீசன் 8 க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.