சினிமா

’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்? மலரும் நினைவுகளில் பாரதிராஜா!

’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்? மலரும் நினைவுகளில் பாரதிராஜா!

webteam

கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலி ம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி  யுள்ள இந்தப் படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு. ஜெய்பிரகாஸ் இசை. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கேயார், தயாரிப் பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் படக்குழுவை வாழ்த்தினார்கள்.  

இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ’கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித் து எடுத்துள்ளார். 

இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால்தான் அவரை சப்பாணி கேரக்ட ருக்கு தேர்வுசெய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே கேரக்டருக்கு நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணி யாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன். இப்படி சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள கூடாது. 

எங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும். அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்" என்றார்.