நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வாரம் வெளியான பீஸ்ட் திரைப்படம், கடந்த வார இறுதிவரையில் ரூ.93 கோடி வரை சம்பாதித்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் யஷ்ஷின் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களுடன் தியேட்டரில் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வெளிவந்தது. தொடக்க வார இறுதியில், இப்படம் மாநிலத்தில் ரூ 93 கோடி வசூலித்ததாகவும், விரைவில் மதிப்புமிக்க ரூ 100 கோடி சம்பாதித்த திரைப்படங்களுக்கான வரிசையிலும் படம் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
பீஸ்ட் வசூல் குறித்து வர்த்தக ஆய்வாளர் எல்.எம்.கௌசிக் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில், “தமிழகத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற பீஸ்ட் திரைப்படம், 5 நாட்களில் தமிழ்நாடு அளவில் 100 கோடி ரூபாய் வசூலை குவிக்க உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... பீஸ்ட் திரைவிமர்சனம்
இதேபோல பீஸ்ட் திரைப்படம் தெலுங்கில் ஐந்து நாள்களில் 7 கோடி வரை சம்பாதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. உலகளவில், ஃப்ரான்ஸில் கொரோனாவுக்குப்பின் அதிக வரவேற்பை பெற்ற படமாக பீஸ்ட் தான் உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: 'பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸை' அதிரவைத்த ‘கே.ஜி.எஃப். 2’ வசூல் - ஒரு நாள் 'கலெக்சன்' எவ்வளவு?