சினிமா

மெரினா புரட்சி படத்திற்கு மீண்டும் தடை

மெரினா புரட்சி படத்திற்கு மீண்டும் தடை

Rasus

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான 'மெரினா புரட்சி' படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை விதித்துள்ளது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக எம்.எஸ். ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெரினா புரட்சி’. இந்த படத்துக்கு தடை விதித்த மத்திய திரைப்பட தணிக்கைக் குழு, மறு தணிக்கைக்கு அனுப்பிவைத்தது. இந்நிலையில் நடிகை கவுதமி தலைமையிலான மறு தணிக்கை குழுவும் படத்திற்கு தடை விதித்து இரண்டாவது மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்திய சினிமேட்டோகிராப் சட்ட விதிகளின் படி, மறு தணிக்கைக் குழு தடை விதித்தால் தீர்ப்பாயத்திற்கு சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இரண்டாவது மறு தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.