சினிமா

பாகுபலி 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்த சிங்கப்பூர்

பாகுபலி 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்த சிங்கப்பூர்

webteam

எஸ்எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

தலையை வெட்டுவது போன்ற சில காட்சிகள் வன்முறையாக உள்ளதாக தணிக்கை குழு கருதியதால் பாகுபலி 2 படத்தை 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க தடை செய்யும் ’NC16’சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் தணிக்கை குழு தலைவர் பஃக்லாஜ் நஹ்லானி கூறும் பொழுது, பாகுபலி படத்தில் வரும் போர் காட்சிகள் மற்றும் தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் மிகவும் வன்முறையாக உள்ளதாக சிங்கப்பூர் தணிக்கை குழு கருதியதாகத் தெரிவித்தார்.

இயற்கையாகவே இந்திய சினிமாதுறையினர் கொஞ்சம் வன்முறையான படங்களையே உருவாக்குகின்றனர். இந்தியாவில் யு சர்ட்டிபிகேட் கொடுக்கும் பல பாலிவுட் படங்களுக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் ஏ சான்றிதழே கொடுக்கப்படுகிறது என்றார் அவர்.

தணிக்கை குழுவின் இந்த முடிவுக்கு கலாச்சார வித்தியாசம்தான் காரணம். இந்தியாவில் வளரும் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே இந்திய புராண கதைகளை கேட்டு வருகின்றனர். புராணங்களில் அரக்கனின் தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் சாதாரணம். ஆனால் சிங்கப்பூர் குழந்தைகளுக்கு இதுபோன்ற வன்முறை கதைகள் புதிது. நாங்கள் தலையை வெட்டும் காட்சியை நீக்கினால், அது மதத்திற்கு எதிரானதாக ஆகிவிடும். இந்திய தணிக்கை குழுவில் உள்ளவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுகிறார்கள். ஒரு படத்தில் வரும் முத்தக்காட்சியை நீக்கினால் எங்களை ‘இவர்கள் பெரிய ஒழுங்கா’ என்று கேட்கின்றனர். ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது போன்ற காட்சியை நீக்கினால் எங்களை ‘ஓரினச் சேர்க்கைக்கு எதிரானவர்கள்’என்று பழிபோடுகிறார்கள். அதனால்தான் இது போன்ற படங்களுக்கு நாங்கள் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்க்ள பார்க்கக் கூடாது என்று ‘NC16’ சான்றிதழ் தருகிறோம் என்று பஃக்லாஜ் கூறினார்.

சிறு வயதிலிருந்தே நம் இந்தியாவில் வளரும் குழந்தைகள் வன்முறை நிறைந்த படங்களைப் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டனர். அதனால்தான் சிங்கப்பூரில் வன்முறைக் காட்சிகள் உள்ளதாகக் கருதப்படும் பாகுபலி 2 போன்ற திரைப்படங்கள் இங்கு குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கப்படும் படமாக உள்ளது.