சிறந்த டி.வி. தொடர் நடிகருக்கான ‘கோல்டன் குளோப்’ விருது இந்த வருடன் அஸிஸ் அன்சாரிக்கு கிடைத்துள்ளது. இவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த மற்றும் நகைச்சுவை சினிமா, டி.வி தொடர் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக ‘கோல்டன் குளோப்’ விருதுகள் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படுவதால் இந்த விருதுக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்த வருடத்துக்கான விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.
இதில் நகைச்சுவை பிரிவில், சிறந்த டி.வி. தொடர் நடிகருக்கான விருது அஸிஸ் அன்சாரிக்கு கிடைத்தது. இவரது பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழரான அன்சாரி, ‘தி மாஸ்டர் ஆப் நன்’ என்ற தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த விருதை பெறுவது இதுவே முதன் முறை. இந்த விருதை பெறும் முதல் இந்திய-அமெரிக்கரும் அஸிஸ் அன்சாரிதான்.
அன்சாரி, ’தி ராக்கர்’, ’ஐஸ் ஏஜ்: கான்டினென்டல் டிரிஃப்ட்’, ’எபிக்’உட்பட சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் அமெரிக்காவில் கலக்கி வருகிறார்.