தமிழ் மற்றும் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக, இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது மனைவியான சாய்ரா பானு தங்களின் 29 வருட திருமணவாழ்வு முடிவு பெற்றுவிட்டது என்று நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.. இதுக்குறித்து ஏ.ஆர் . ரகுமானும் உணர்ச்சி பூர்வமாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்திருந்த நிலையில், “இந்த தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என அவர்களது மகன் அமீன் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். மேலும், இந்த செய்தியை சாய்ரா தனது வழக்கறிஞரான வந்தனா ஷா மூலமாக தெரிந்திருந்தார்.
இந்தநிலையில், சாய்ரா பானுவின் வழக்கறிஞரான வந்தனா ஷா தனது சமூக வலைதளப்பக்கத்தில் விவகாரத்து தொடர்பாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது..
வந்தனா ஷா என்பவர் திரைத்துறையினரின் விவகாரத்தை கையாளும் பிரபலமான பெண் விவாகரத்து வழக்கறிஞர்.
மும்பை, புனேவைச் சேர்ந்த இவர் சிறந்த பெண் வழக்கறிஞர் மட்டுமல்ல... எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறந்த தொழில்முனைவோரும் கூட... (Social Entrepreneur).
பிபிசி நிறுவனம் இவரை குறித்து , : ‘Invisible Women of India’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கி, அதனை சர்வதேச மகளிர் தினத்தன்று உலகம் முழுவதும் ஒளிப்பரப்பவும் செய்துள்ளது.
The Ex-Files: The Story of My Divorce என்ற புத்தகத்தின் ஆசிரியரும் இவர்தான். இந்த புத்தகத்தில் விவாகரத்தை ஒரு நகைச்சுவை தன்மையுடன் இவர் விவரித்திருக்கிறார்.
மேலும், இது சட்டம் சார்ந்த கல்லூரி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
திருமண வாழ்விலிருந்து விலகி , வங்கியில் 750 ரூபாய் பணத்தோடு மட்டுமே தனது மீதமுள்ள வாழ்நாளை கட்டியெழுப்ப நினைத்த வந்தனா தன்னைப்போலவே திருமணம் வாழ்விலிருந்து விலக நினைப்பவர்களுக்கு விவகரத்தின் மூலம் தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.
இவரது முதல் புத்தகம் “ 360 Degrees Back to Life" ல் நகைச்சுவையான தன்மையுடன் விவாகரத்தை குறித்து எழுதியிருப்பார்.. இது விருதையும் தட்டி சென்றுள்ளது.
இவர் Huffington post india, Huffington Post America, SAVVY, Thrive , Dainik Bhaskar போன்றவற்றிலும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிபிசி நிறுவனத்திற்கும் சில கட்டுரைகளை எழுதுகிறார்.
குறிப்பாக, இந்தியாவின் சிறந்த வழக்கறிஞருக்குக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
விவாகரத்துக்கான சிறந்த பெண் வழக்கறிஞர் விருதை பெற்றுள்ள வந்தனா திரைப்பிரபலங்களின் விவாகரத்து தொடர்பாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “ திரைப்பிரபலங்களின் வாழ்க்கை என்பது மற்றவர்களிடமிருந்து மிகவும் வேறுபடும் ஒன்று. திருமணங்கள் தோல்வியை தழுவுவதற்கு குறிப்பாக பாலிவுட்டில் தோல்வியை தழுவுவதற்கு காரணம் துரோகம் என்று நான் நினைக்கவில்லை.. இதற்கு.. ஒருவகையான சலிப்பு தான் காரணம் என்று நினைக்கிறேன்.
இந்த சலிப்புதான் ஒரு திருமணத்திலிருந்து மற்றொரு திருமணத்தை நோக்கி அவர்களை அழைத்து செல்கிறது.. இது பாலிவுட்டில் ,குறிப்பாக பணக்காரர்களிடத்தில் அதிகளவில் காணப்படுகிறது.
வெளி நபர்களின் குறுக்கீட்டாலும், மாமனார் ,மாமியார் ஆகியோர் எல்லாம் இவர்களின் விவாகரத்துகளில் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.
ஒரு தென் இந்தியா ஜோடி இருக்கிறது. 10,000 கோடி மதிப்புள்ள இவர் தனது மனைவியிடம் புலியாக இருந்தாலும், தனது தந்தையிடம் பூனையாகத்தான் இருக்கிறார்.. இவரது தந்தையால்தான் அந்த வீட்டில் மருமகளின் நிம்மதியும் தொலைந்திருக்கிறது.” என்று பதிவிட்டிருக்கிறார்..
இததான் தற்போது பேசுபொருளான ஒன்றாக மாறியிருக்கிறது.