பாக்ஸர் ஆறுமுகம் Ramesh Kumar
சினிமா

தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்த பாக்ஸர் ஆறுமுகம் காலமானார்

மறைந்த பாக்ஸர் ஆறுமுகம் தமிழ்சினிமாவிலும், தமிழ்நாட்டின் குத்துச்சண்டை வரலாற்றிலும் முக்கியமான இடம் பிடித்த ஒரு கலைஞர்

PT WEB

1985ல் குத்துச்சண்டை கிங்காக விளங்கிய பாக்ஸர் ஆறுமுகம்!

பாக்ஸர் ஆறுமுகம் சாதாரணமான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாரியப்பன் முத்துலட்சுமிக்கு என்ற தம்பதிக்கு 15-06-1955 ஆம் ஆண்டு பாக்ஸர் ஆறுமுகம் (68) பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர், அவர்களில் மூத்தவர் ஆறுமுகம்.

பாக்ஸர் ஆறுமுகம்

குத்துச்சண்டையில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்த இவர், 1985ஆம் ஆண்டு காலகட்டதில் குத்துச்சண்டையில் யாரும் நெருங்க கூடமுடியாத ஒருவராக இருந்துள்ளார். அந்த அளவுக்கு குத்துசண்டையில் பிரபலமான நாக்அவுட் கிங்காக விளங்கினார்.

சார்பட்டா முதல் பூலோகம் வரை படத்தின் கருவில் இருந்த ஆறுமுகம்!

சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், இவரிடம் நேரடியாக வந்து சார்பட்டா பரம்பரையின் கதையைக் கேட்டுவிட்டு தான் சார்பட்டா பரம்பரை என்னும் படத்தையே இயக்கினார். நடிகர் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்திலும் இவரை மையமாக வைத்து தான் படக்குழுவினர் படத்தை இயக்கியுள்ளனர்.

Sarpatta Parambarai

கமல்ஹாசனுடன் காக்கிசட்டையில் நடித்த இவர் கமலஹாசன் உடன் நேரடியாக மோதி உள்ளார். வா கோட்டர் கட்டிங், தண்ணில கண்டம், ஆரண்யகாண்டம் என பல படங்களில் நடித்துள்ளார் இவர்.

இவருடைய குத்துச்சண்டை போட்டியில் நடுவராக இருந்த எம்.ஜி.ஆர்!

1985-ம் ஆண்டு காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாடிகாட் பணியில் இருந்தார். மேலும் இவர் போட்டியிடும் குத்துச்சண்டை போட்டிகளில் எம்.ஜி.ஆர் நடுவராக இருந்துள்ளார். இவருக்காக ரயில்வே துறை நிர்வாகம் தாமாக முன்வந்து ரயில்வே துறையில் வேலை தருகிறோம் என சொன்னதற்கு வேண்டாம் என சொல்லி, ரயில்வே வேலையை தூக்கிப் போட்டவர். பாக்சர் வடிவேலு இவருடைய சிஷ்யர் தான் என கூறப்படுகிறது.

பாக்ஸர் ஆறுமுகம்

இப்படி பல பரிமாணங்களில் வாழ்ந்த ஆறுமுகம், லஷ்மி என்பவரை காதலித்து 1977-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு மறைவு!

நேற்று தினம் பாக்ஸர் ஆறுமுகத்திற்கு மூச்சுத்திணறல் (FIX) ஏற்பட்டநிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை 04:45 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

பாக்ஸர் ஆறுமுகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, சார்பட்டா பரம்பரை மற்றும் மற்ற பரம்பரையினர் முதற்கொண்டு திரை பிரபலமான வில்லன் நடிகர் சாய்தீனா ஆகியோர் இவருடைய மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவரது பூதவுடல் சென்னை ராயபுரம், அமராஞ்சிபுரம் அவரது இல்லத்திலிருந்து சரியாக 05:15 மணிக்கு புறப்பட்டு காசிமேடு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.