சாய்ரா பானு, ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தளம்
சினிமா

"ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தபோதிலும், இந்த முடிவு..” - ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

ஏ.ஆர்.ரஹ்மானை, அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.

Prakash J

தமிழ் மற்றும் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக, இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இசைப்புயல் என அழைக்கப்படும் இவர், மிகவும் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஏஆர் ரஹ்மான் ஒரே படத்திற்காக இரண்டு கிராமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக, அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்த அந்த அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளேன். இருவருக்குமிடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்டது. மிகுந்த வலி மற்றும் வேதனையில்தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா ஆகிய இரண்டு மகள்கள் மற்றும் அமீன் என்ற மகனும் உள்ளனர்.

இதையும் படிக்க: 1000 நாட்கள்! பற்றி எரியும் நெருப்பு.. உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுவரை நடந்தது என்ன? 20 முக்கிய Points

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ள நிலையில், “இந்த தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர்களது மகன் அமீன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.