சினிமா

தமிழுக்கு வருகிறது இன்னொரு வரலாற்றுப்படம்!

தமிழுக்கு வருகிறது இன்னொரு வரலாற்றுப்படம்!

Rasus

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹேமமாலினி நடித்த தெலுங்கு படம், ’கெளதமி புத்ர சாதகர்ணி’. பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார். மற்றும் ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி உட்பட பலர் நடித்திருந்தனர். ஆந்திராவில் ஹிட்டான இந்தப் படம் இப்போது தமிழில் வெளியாகிறது. ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா நிறுவனம் சார்பில் நரேந்த்ரா தயாரித்துள்ள இந்தப் படத்தை கிரீஷ் இயக்கியுள்ளார். வசனத்துடன் தமிழாக்கப் பொறுப்பேற்றிருப்பவர் மருதபரணி.

’முதலாம் நூற்றாண்டில் நடந்த கதையை கொண்ட படம் இது. இந்த பாரத கண்டத்தையும் வடக்கே நஹபாணன், தெற்கே சாதகர்ணி ஆண்டு வந்தனர். இதில் நஹபாணன் கொடுங்கோல் ஆட்சி செய்தவன். தனக்கு கீழ் இருந்த குறுநில மன்னர்களின் மகன்களை சிறை பிடித்து வைத்துக் கொண்டான். தன் மீது யாரும் படையெடுத்து விடக் கூடாது என்று அந்த குறுநில மன்னர்களை கேடயமாகப் பயன்படுத்தினான். இதை எதிர்த்து சாதகர்ணி அம்மாவின் ஆசிர்வாதத்துடன் போருக்கு கிளம்பினான். நஹபாணனின் தந்திரங்களையும் நரித்தனத்தையும் முறியடித்தான். அவன் வெற்றியை கொண்டாடிய மக்கள், சாதகர்ணி என்கிற பெயருக்கு முன்னால் அவரது தாயார் கெளதமி பெயரை சூட்டி, கெளதமி புத்ர சாதகர்ணி என்று பாராட்டினர்.

தாயின் பெயரை இன்ஷியலாகக் கொண்ட முதல் இந்தியன் என்கிற பெருமையை பெற்றான். இதுதான் கதை. இதன் படப்பிடிப்பு மொராக்கோ, ஜார்ஜியா மற்றும் மத்திய பிரதேசத்திலும் நடந்துள்ளது’ என்றது படக்குழு.