விஜய் நடித்துள்ள வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் `வாரிசு’. இந்தப் படத்திற்காக செம்பரம்பாக்கம் அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் உரிய அனுமதி இன்றி யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியாதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்திய விலங்குகள் நல வாரியம் இதற்கு விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஷ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில், “மிருக வதைக்கு எதிரான சட்டத்தைப் பின்பற்றி, முறையான முன் அனுமதி பெற்றே விலங்குகளை வைத்துப் படப்பிடிப்பு நடத்த வேண்டும். ஆனால் இதுவரை இந்தப் படக்குழுவில் இருந்து எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை.
எனவே ஏன் முன் அனுமதி பெறவில்லை என்ற விளக்கத்தை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் நடிகர் விஜயின் கார் கண்ணடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.