Animal Movie X
சினிமா

மின்னல் வேகத்தில் 500 கோடி! வசூல்வேட்டை நிகழ்த்தும் ANIMAL! பாலிவுட்டில் புதுவரலாறு எழுதும் ரன்பீர்!

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் அனிமல் திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திவருகிறது.

Rishan Vengai

அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாபி தியோல் முதலியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "ANIMAL". இந்தி, தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் கலவையான வரவேற்பை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை வசூல்வேட்டை நடத்திவருகிறது.

தந்தை மீது அதீத பாசம் வைத்திருக்கும் மகனின் கதையாக ஜொலித்துவரும் அனிமல் திரைப்படம், பெரும்பாலான ரசிகர்களின் மனதை வென்றிருப்பது வசூல் ரீதியில் உண்மையாகியுள்ளது. பாலிவுட் சினிமா வரலாற்றில் ஷாருக்கானின் ஜவானுக்குப் பிறகு இரண்டாவது மிகப்பெரிய முதல் நாள் வசூலை குவித்திருக்கும் அனிமல் திரைப்படம், முதல் வார இறுதியில் இந்தியாவில் மட்டும் ரூ.201 கோடியை எட்டி மிரட்டிவருகிறது.

500 கோடி கிளப்பில் இணையும் ANIMAL!

டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான அனிமல் திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுவருகிறது. தந்தை பாசத்திற்காக ஏங்கும் ஒரு மகனின் மனப்போராட்டமாய் நகரும் கதாபாத்திரத்தில் தனியொரு ஆளாக படத்தை ஏந்திச்செல்லும் ரன்பீர் கபூர், சமூக வலைதளங்களில் கூட ரசிகர்களை ஆட்கொண்டு வருகிறார். ”தனது சகோதரிக்காக க்ளாஸ் ரூமில் கையில் துப்பாக்கியோடு ரன்பீர் கொடுக்கும் மாஸ் எண்ட்ரி” தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் ஒரு காட்சியாக இருந்துவருகிறது.

Animal movie

தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுவரும் அனிமல் திரைப்படம், திரையரங்குகளிலும் மக்கள் ஆதரவை மங்காமல் வைத்துவருகிறது. முதல்நாளில் அதிகப்படியான வசூலுடன் முதல் வாரத்தின் முடிவில் 201 கோடியாக இருந்த ANIMAL, 5வது நாள் முடிவில் உலகளவில் 481 கோடியை ஈட்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் தெரிவித்துள்ளது. டி-சீரிஸ் அப்டேட்டின் படி, வெளியான 5 நாட்களுக்குப் பிறகு படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் ரூ.283 கோடியாகவும், உலகளாவிய மொத்த வசூல் 481 கோடி ரூபாயாகவும் உள்ளது. இது ரன்பீரின் முந்தைய படமான பிரம்மாஸ்திராவின் இரண்டு விதமான வசூலையும் முறியடித்துள்ளது.

Animal Movie

இதன்மூலம் உள்நாட்டு வசூலில் 300 கோடியை நெருங்கியிருக்கும் அனிமல் திரைப்படம், பாலிவுட்டின் பதான், கதார் 2 மற்றும் ஜவான் படங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் 500 கோடிகளைத் தாண்டி வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வார இறுதி நாட்கள் முடிந்துள்ளதால், 5வது நாளில் வசூல் சற்று குறைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல், சென்னை மற்றும் ஆந்திராவில் மிக்ஜாம் புயல் காரணமாக வசூல் சற்று பாதிப்படைந்துள்ளது. இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீரானதும், வார இறுதி நாட்களான விடுமுறை தினங்களை முன்னிட்டு வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய வசூலை வைத்து பார்த்தால், ANIMAL திரைப்படம் விரைவில் இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடியை கடந்து விடும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

சொந்த ரெக்கார்டை உடைக்கவிருக்கும் ரன்பீர்!

அதுமட்டுமல்லாமல் கடந்த 2018-ல் ரன்பீர் நடிப்பில் உருவாகி வெளியான சஞ்சு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது.

Sanju Movie

பாலிவுட்டின் 5வது சிறந்த கலக்சனாக அப்போது வசூலை ஈட்டிய சஞ்சு திரைப்படத்தின் உள்நாட்டு ( ரூ.340 கோடி) மற்றும் உலகளாவிய மொத்த (ரூ.590 கோடி) வசூலையும் விரைவில் மிஞ்சி, ரன்பீர் சினிமா வாழ்க்கையில் ஒரு சிறந்த மைல்கல் படமாகவும் ANIMAL மாறவிருக்கிறது.