சினிமா

கேரளாவுக்கு நிதி திரட்ட கலைநிகழ்ச்சி நடத்துகிறது ’அம்மா’ !

webteam

நிவாரண நிதி திரட்டுவதற்காக மலையாள நடிகர் சங்கம் அபுதாபியில் கலைநிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்தனர். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பி னர். வரலாறு காணாத இயற்கை பேரிடரால் 483 பேர் உயிரிழந்ததாகவும் 140 பேரைக் காணவில்லை என்றும் 14 லட்சத்து 50 ஆயிரத்து 707 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து இருந்ததாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்நிலையில் வெள்ளநிவாரணத்துக்காக, அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் அம்மாநில முதலமைச் சரைச் சந்தித்து நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். 

இதற்கிடையே நிவாரண நிதி திரட்ட மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’ முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி அபுதாபி யில் மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறது.

இதுபற்றி ’அம்மா’வின் பொருளாளர் ஜகதீஷ் கூறும்போது, ‘இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள் உட்பட அனைவரும் பங்கேற்பார் கள் என்று நம்புகிறோம். இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ.5 கோடி திரட்ட முடிவு செய்துள்ளோம். இதற்கு ஸ்பான்சர் செய்ய பல்வேறு நிறுவனங்க ளிடம் பேசிவருகிறோம். இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டோம்’ என்றார்.