ஏதாவது செல்லப் பிராணிகள் மீது பாசம் வைத்துக் கொஞ்சுவது பிரபலங்களுக்கும் பிரபலமான ஒன்று! அதில் இப்போது சேர்ந்திருக்கிறார் அமலா பால்.
தமிழில் அரவிந்த்சாமியுடன் ’பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தில் நடித்திருந்தார் அமலா பால். இதையடுத்து அவர் நடிக்கும் படம் ’ராட்சஸன்’. இதில் விஷ்ணு விஷால் ஹீரோ. ராம்குமார் இயக்குகிறார். இதற்கிடையே மலையாளத்தில் பிளஸ்சி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிருத்விராஜ் ஹீரோ. வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலா பால்! கிளாமராக உள்ள அந்தப் புகைப்படத்தில் நாய் ஒன்றுடன் இருக்கிறார். அந்த நாய்க்குட்டிக்கு ஒரு வயது பூர்த்தியாகிவிட்டதாம்! ‘என் செல்ல பேபி ஒரு வயதை அடைந்துவிட்டது. ஹேப்பி பர்த் டே’ என்று குறிப்பிட்டுள்ளார். வின்டர் வகை செல்ல நாயான அதைப் பாராட்டியுள்ள அமலா பால், என் இதயம், ஆன்மா, வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றியதற்காக நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
பாசக்காரய்ங்க!