துபாயில் பந்தய ஓடுதளத்தில் நடிகர் அஜித்குமார் காரை இயக்கி சோதனை செய்துள்ளார்.
துபாயில் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள GT கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் அறிமுகமாக உள்ளார். கார் பந்தயங்களில் ஆர்வமுடன் பங்கேற்று வந்த நடிகர் அஜித்குமார், காயங்களால் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் பந்தய களத்திற்கு திரும்பியுள்ள அவர், "அஜித் குமார் ரேசிங்" என்ற ஒரு அணியை வாங்கியுள்ளார். துபாயில் ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள கார் பந்தயத்தில் அந்த அணி பங்கேற்க உள்ளது.
அஜித்குமார் தலைமையிலான அணியில் Fabian duffeiux, mathew deutry, Cam McLeod என மூன்று ஓட்டுநர்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரில் அறிமுகமாக உள்ள நடிகர் அஜித்குமார், துபாய் ஆட்டோட்ரோம் ஓடுதளத்தில் PORSCHE GT3 கப் காரை இயக்கி சோதனை செய்தார்.
மணிக்கு 300 முதல் 350 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட அந்த காரை, அஜித்குமார் சோதனை செய்த காட்சிகளை அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.