சினிமா

“30 நிமிடங்கள் மனம்விட்டு சிரித்து பேசினார்”-ரசிகர்களிடையே லைக்ஸ் குவிக்கும் அஜித் போட்டோ

“30 நிமிடங்கள் மனம்விட்டு சிரித்து பேசினார்”-ரசிகர்களிடையே லைக்ஸ் குவிக்கும் அஜித் போட்டோ

webteam

 பொது விழாக்களில் அதிகம் பார்க்கமுடியாது. தேர்தல் நேரத்தில் க்யூவில் நின்று வாக்களிப்பார். யாருக்கும் தெரியாமல் உதவி செய்வார். அதிகம் பேசுவதில்லை. அத்துடன் தல எனப் புகழப்படும் அளவுக்கு அஜித்குமாருக்கு ரசிகர்களிடையே அன்பு அதிகம்.

ஊரடங்கில் வீடடங்கிக் கிடக்கும் நேரத்தில் அவரது ரசிகர்கள், படப்பிடிப்பில் நடந்த யாரும் பார்க்காத அழகிய தருணங்களின் புகைப்படங்களை தேடியெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அப்படியொரு படம்தான் இது. 2010 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த அசல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

தற்போது ரசிகர்களிடையே வைரலாகும் இந்தப் படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம், இயக்குநர் கெளரவ் நாராயணன் ஆகியோருடன் அஜித் மனம்விட்டு சிரித்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள கெளரவ் நாராயணன், அசல் படப்பிடிப்புத் தளத்தில், அஜித் முப்பது நிமிடங்கள் தொடர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த தருணத்தில் என்னைச் சிரிக்கவைத்த தலயின் ஒவ்வொரு ரியாக்சனையும் மறக்காமல் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.