சினிமா

"அநாதையாக விட்டுவிடக்கூடாது என்று தத்தெடுத்தக் குழந்தை துப்பறிவாளன் 2”- விஷால்

"அநாதையாக விட்டுவிடக்கூடாது என்று தத்தெடுத்தக் குழந்தை துப்பறிவாளன் 2”- விஷால்

sharpana

”‘துப்பறிவாளன் 2’அநாதையாக விட்டுவிடக்கூடாது என்று தத்தெடுத்தக் குழந்தை” என்று நடிகர் விஷால் பேசியிருக்கிறார்.

தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக ’எனிமி’ வெளியாகிறது. இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி, கருணாகரன் நடிக்கிறார்கள். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்க, தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் குறித்து நடிகர் விஷால் பேசும்போது, "நான் தான் ஆர்யாவை எனிமி ஆக்கினேன். முதலில் ஆனந்த் சங்கர் என்னிடம் கதை சொல்லும் போது படத்தின் தலைப்பு வைக்கப்படவில்லை. கதை கேட்டவுடன் நான்தான் இந்த பாத்திரத்தில் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். ஏற்கனவே ’இரும்புதிரை’ படத்தில், அர்ஜூன் சார் கதாபாத்திரத்திற்கு நடிக்க ஆர்யாவை தான் அணுகினோம். ஆனால், ஆர்யா அப்போது அந்த மாதிரி கதாபாத்திரங்கள் செய்யும் சூழ்நிலையில் இல்லை. எப்பொழுதும் வில்லன் கதாப்பாத்திரம் புத்திசாலிதனமாகவும், வலுவானதாகவும் இருக்கும் பட்சத்தில் படத்தில் ஹீரோ கதாபாத்திரமும் வலுவானதாக மாறும். இரும்புதிரை, திமிரு போன்று அமையும். நான் இதை சொல்லும் போது, ஆனந்த் அதிர்ச்சியடைந்தார். நீங்கள் இன்னொரு ஹீரோவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை என ஆனந்த் கூறினார். அவர் மீண்டும் திரைக்கதை வேலை செய்து, இறுதி வடிவத்தை கூறும் போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட, ஹீரோ-வில்லன் கெமிஸ்ட்ரி பெரிதாக பேசப்படும். அப்புறம் தான் எனிமி என்று தலைப்பு வைத்தோம். இதை விட சிறந்த டைட்டில் இல்லையென்று முடிவு செய்தோம்.

ஆர்யா எதற்கு சர்பட்டா பண்ணான் என இப்போதுதான் புரிந்தது. படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அவர் என்னை அடிக்க வேண்டும். நான் முகத்தை மூடிட்டு இருக்கேன். அவன் என் ரிப்ஸ்-ல் அடித்து கொண்டிருக்கிறான். நான் போதும், போதும் என சொல்லிகொண்டே இருக்கிறேன். அவன் அந்த பாக்ஸிங் ரேஞ்சில் இருந்து மாறவில்லை. அவன் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்-ற்கு கூட செல்லலாம். 4 வருடமாக டிரெய்னிங் எடுத்து கொண்டான். அவன் போட்டிக்கு செல்லும் அளவு தகுதியில் இருக்கிறான்.

கிளைமாக்ஸ் காட்சி தான் படத்தில் முக்கியமானதாக இருக்கும். படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு சிறந்த எக்ஸ்பீரியன்சாக இது இருக்கும். இதை நாங்கள் இருவரும் மீண்டும் நடிப்பதற்கு பல காலம் எடுக்கும். நான் பாலா சார் செய்த ‘அவன் இவன், ஹரி சார் உடன் செய்த தாமிரபரணி போல், இந்த திரைப்படம் அதுவாக தானாக அமைந்தது. படத்தின் கிளைமாக்ஸ் ஹாலிவுட் படம் போல் இருக்கும். கிளைமேக்ஸ் தான் சிறப்பாக இருக்கும். படபிடிப்பின் போது, இருவருக்கும் ரத்த காயம்தான் அதிகமாக ஏற்பட்டது. இருவரும் ஒவ்வொரு நாளும் மருத்துவமனை சென்று வருவோம்” என்றார்.

“துப்பறிவாளன் 2 எப்போது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஷால் ”ஜனவரியில் மீண்டும் ஷூட்டிங் போகிறோம். ஏப்ரலில் படம் வந்துவிடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும். துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டுவிடக்கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில், நிறைய நடந்தது”என்றார்.