சினிமா

பெண்களுக்கு சொல்லித்தராதீர்கள்.. ஆண்களுக்கு சொல்லிக் கொடுங்கள்: வரலட்சுமி

பெண்களுக்கு சொல்லித்தராதீர்கள்.. ஆண்களுக்கு சொல்லிக் கொடுங்கள்: வரலட்சுமி

webteam

பெண்கள் இதைத்தான் அணிய வேண்டும் இப்படித்தான் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு ஆண்களுக்கு ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள் என காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகை வரலட்சுமி.

நடிகை பாவனாவிற்கு நேர்ந்த பாலியலில் தொல்லை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வரலட்சுமி, சினிமா துறையில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பேசும்போது பெரும்பாலானோர், சினிமாதுறை இப்படித்தான் என்று தெரிந்துதானே அதில் இணைந்தீர்கள்?.... இப்போது ஏன் குறை சொல்கிறீர்கள்? என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் பதில் இதுதான் - படங்களில் நடிப்பது எனது விருப்பம். அது என் தொழில். நான் அதற்காக கடினமாக உழைக்கிறேன். பாலியல் தொந்தரவுகளை பொறுத்து கொண்டுதான் சினிமா துறையில் இருக்க வேண்டும் என்ற வாதம் சரி அல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

பெண்களுக்கு இதைத்தான் அணிய வேண்டும், இப்படித்தான் பேச வேண்டும் என்று சொல்லித் தருவதை விட்டு விட்டு ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் என்று ஆண்களுக்கு சொல்லி கொடுங்கள் என்று காட்டமாகக் கூறியுள்ளார் வரலட்சுமி.

சினிமா துறையில் மட்டும் அல்ல. எல்லா துறையிலும் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள வரலட்சுமி, நாம் இப்பொழுது செயல்படாவிட்டால் பாலியல் வன்கொடுமைகளை எப்பொழுதுமே நிறுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.