சினிமா

பொய் பாலியல் புகார் கொடுப்பதா? நடிகை ராணி மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் முடிவு

பொய் பாலியல் புகார் கொடுப்பதா? நடிகை ராணி மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் முடிவு

webteam

நடிகர் சண்முகராஜன் மீது பொய்யாக பாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி, பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே படங்களில் தொடர்ந்து நடிக்க முடியும் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. 

'வில்லுபாட்டுக்காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராணி (44). பின்னர் ’காதல்கோட்டை’ படத்தில் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா...’ என்ற பாடலிலும், ஜெமினி படத்தில் ‘ஓ போடு...’ பாடலிலும் நடனமாடி பிரபலமானார். இவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகும் ‘நந்தினி’  தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் இவர் கணவராக நடித்தவர் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் சண்முகராஜன். இவர், விருமாண்டி, சிவாஜி, சண்டகோழி உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ராணி, தனக்கு சண்முகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக செங்குன்றம் போலீசில் கடந்த அக்டோபர் மாதம் புகார் கொடுத்தார். சண்முகராஜன் தொலைக்காட்சி படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதை தனது கணவரிடம் தெரிவித் ததால் தன்னை தாக்கியதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

பின்னர், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டு விட்டதால் புகாரை வாபஸ் பெறுவதாகத் தெரிவித் தார்.

இந்நிலையில் நடிகை ராணி, தன் மீது பொய் புகார் கொடுத்து தன் பெயரை களங்கப்படுத்தி விட்டதாக நடிகர் சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக, ராணியிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான பதிலை ராணி இது வரை வழங்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சங்கம், நடிகர் சண்முகராஜனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நடிகை ராணியின் பாலியல் புகார் குறித்து, 09.12.18 அன்று நடந்த செயற்குழுவில் தாங்கள் நேரில் வந்து விளக்கம் அளித்தீர்கள். தங்கள் மீது, காழ்ப்புணர்ச்சியால் பாலியல் புகார் கொடுக் கப் பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்துகொண்டோம்.  

தாங்கள் திரைத்துறையிலும் நாடகத்துறையிலும் இதுவரை தனிப்பட்ட முறையில் நற்பெயர் பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த அசம் பாவிதத்துக்கு நடிகர் சங்கம் வருந்துகிறது. அதே நேரம், இனிவரும் காலத்தில் நடிகை ராணி, திரைப்படத்திலோ, தொலைக்காட்சித் தொடரி லோ நடிக்க வரும்போது, அவர் தங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.