நடிகை ரம்யா பாண்டியன் - நடிகர் சூரி சந்திப்பு புதிய தலைமுறை
சினிமா

திருச்செந்தூர்: சாமி தரிசனத்துக்கு சென்ற இடத்தில் நடிகை ரம்யா பாண்டியன் - நடிகர் சூரி சந்திப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகை ரம்யா பாண்டியன் தனது கணவருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

PT WEB

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ரம்யா பாண்டியன், தனது காதல் கணவர் லோவல் தவானுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் கணவருடன் தரிசனம்

கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார்.

கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகை ரம்யா பாண்டியனுடன் பக்தர்கள், பொதுமக்கள் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார் அவர். அதில் ஒரு குழந்தைக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

நடிகை ரம்யா பாண்டியன்

முன்னதாக கோயிலுக்கு வந்திருந்த நடிகர் சூரியை வழியில் சந்தித்தார் ரம்யா பாண்டியன். அதைத் தொடர்ந்து நலம் விசாரித்துக் கொண்டு மூன்று பேரும் (சூரி, ரம்யா பாண்டியன் மற்றும் அவரின் கணவர்) சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

லவல் தவான் - சூரி - ரம்யா பாண்டியன்

முன்னதாக சூரி திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தபின், “தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக கங்குவா படம் இருக்கிறது. வாரந்தோறும் நெகட்டிவாக சொன்னால் பிரபலமாகலாம் என எண்ணி, சிலர் கேமரா முன்பாக இப்படி பேசி வருகின்றனர்” எனக் கூறினார்.