சினிமா

“ஆன்மீகமே இந்திய கலாசாரத்தின் அடையாளம்!”- ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலில் பிரியங்கா சோப்ரா

EllusamyKarthik

“ஆன்மிகம் இந்திய கலாச்சாரத்தின் அடையாளம்” என பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் நேர்காணலில் நடிகை பிரியங்கா சோப்ரா இதனை தெரிவித்துள்ளார். 

“நான் ஒரு கான்வென்ட் பள்ளியில் படித்துக் கொண்டே வளர்ந்தேன். கிறிஸ்தவம் குறித்து புரிதல் இருக்கிறது. என் அப்பா மசூதியில் பாடுவார். அதனால் எனக்கு இஸ்லாம் தெரியும். நான் வளர்ந்தது ஒரு இந்து குடும்பத்தில். ஆன்மீகம் என்பது இந்தியாவின் ஒரு பெரிய அடையாளம். 

நான் பிரார்த்தனை செய்வேன். என் வீட்டில் கோயில் இருக்கிறது.  நம்மையும் கடந்து ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன். அதன் மீது நம்பிக்கை வைக்க விரும்புகிறேன்” என பிரியங்கா தனக்கான ஆன்மீக அடித்தளம் குறித்து கேள்விக்கு ஓபராவிடம் பதில் அளித்துள்ளார். 

வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை  இந்தியாவை சேர்ந்த நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனசும் தொகுத்து வழங்க உள்ளனர். தமிழ் திரைத்துறையின் மூலம் தனது சினிமா வாய்ப்பை உருவாக்கிய பிரியங்கா சோப்ரா இன்று பன்னாட்டு படங்களில் நடித்து வருகிறார்.