சினிமா

’மனம் கொத்தி பறவை’ பட நடிகை ஆத்மியா திருமண புகைப்படங்கள்!

’மனம் கொத்தி பறவை’ பட நடிகை ஆத்மியா திருமண புகைப்படங்கள்!

sharpana

சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்தி பறவை’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஆத்மியாவுக்கு நேற்று கேரளாவில் திருமணம் நடைபெற்றது.

இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘மனம் கொத்தி பறவை’ சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக உருவாக காரணமாக அமைந்த படங்களில் ஒன்று.

காமெடி ப்ளஸ் காதல் என்று அனைவரையும் ரசிக்க வைத்த, இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆத்மியா நடித்து கவனம் ஈர்த்தார்.

இதில், வரும் ‘என்ன சொல்ல ஏது சொல்ல’ பாடல் இப்போதும் பலரின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த் ஆத்மியா தமிழில் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார்.

அதன்பிறகு, தற்போது சமுத்திரகனியுடன் இணைந்து ‘வெள்ளை யானை’ படத்தில் நடித்து வருகிறார்.

அதிகளவில் மலையாள படங்களில் நடித்துவரும் ஆத்மியாவுக்கும், கன்னூரைச் சேர்ந்த கப்பல் துறையில் பணிபுரியும் சனூப் என்பவருக்கும் நேற்று நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

திருமணப் புகைப்படங்களில் சிவப்பு நிற உடையில் ஆத்மியா கொள்ளை அழகாக காட்சியளிக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்.