சினிமா

காவிரி புஷ்கர விழாவில் நடிகர் விவேக்

காவிரி புஷ்கர விழாவில் நடிகர் விவேக்

webteam

காவிரி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் விவேக் கும்பகோணம் சென்றுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கும்போது நடத்தப்படுவது காவிரி புஷ்கரமாகும். இந்நிலையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. இன்று மஹாளய அமாவாசை நடைபெறுவதையொட்டி கும்பகோணத்தில் காவிரி மகா புஷ்கர விழா நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு மஹா புஷ்கர விழா நடப்பதால் வழிபாடு நடத்த காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென அரசுக்கு ஆன்மீக பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 10,000 கன அடி தண்ணீரை திறந்துவிட்டது. அந்த தண்ணீர் கல்லணை வந்தது. அங்கிருந்து 4,109 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் கும்பகோணத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மேலக்காவிரி படித்துறை, சக்கர படித்துறை, பகவத் படித்துறை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். இன்று கும்பகோணத்தில் இன்று நடைபெற்று வரும் இந்தப் புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் விவேக் கும்பகோணம் சென்றிருக்கிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ள விவேக், ‘ஆன்மிக யாத்திரைக்காக கும்பகோணம் வந்துள்ளேன்’என குறிப்பிட்டிருக்கிறார்.