சினிமா

மீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால்

மீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால்

rajakannan

திரையுலகில் #MeToo விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி தெரிவித்த புகார் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

திரையுலகில் #MeToo விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார்.

சென்னை வடபழனியில் சண்டகோழி-2 படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், “வைரமுத்து மீது சின்மயிகூறிய புகார் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும். வணிக ரீதியான ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும். திரையுலகில் #MeToo விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

ட்விட்டரில் கருத்து தெரிவித்தால்தான் குரல் கொடுக்கிறோம் என்ற அர்த்தம் இல்லை. அமலாபாலுக்கு பாலியல் துன்புறத்தால் ஏற்பட்டபோது அவருக்கு பக்கபலமாக இருந்தேன். நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக சொன்னால் நடக்க வேண்டியது நடக்கும்.

சின்மயி விவகாரத்தில் அவர் உடனடியாக சொல்லி இருக்க வேண்டும் யாருக்காகவும் சின்மயி அச்சப்பட்டிருக்க கூடாது; பிரச்சனைகளை விரைவாக வெளியே சொல்லுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.