சினிமா

கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டாம்: விஷால்

webteam

10 சதவிகித கேளிக்கை வரி விதித்தால் அதை தயாரிப்பாளர்களால் கட்ட முடியாது என்று நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் 64வது பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஷால், கருணாஸ், கார்த்தி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், தமிழக அரசு 10% கேளிக்கை வரி விதித்தால், அதனை தயாரிப்பாளர்களால் கட்ட இயலாது என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், வரும் 10 ஆம் தேதி தலைமை செயலகத்தில் அதுகுறித்த ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டியதற்கு நன்றி என்றும், தமிழ் சினிமாவிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் கலைத்துறையினர் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளதாகவும் கூறினார். அத்துடன் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை நடிகர் சங்கம் சார்பில் சிறப்பாக கொண்டாட ஆலோசித்துள்ளதாகவும் விஷால் தெரிவித்தார்.