சினிமா

இரட்டை வேடத்தில் அசத்தும் விஜய் - ‘பிகில்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

இரட்டை வேடத்தில் அசத்தும் விஜய் - ‘பிகில்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

rajakannan

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பிகில் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இருப்படங்களை அடுத்து விஜய்யை வைத்து மீண்டும் இயக்குநர் அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த செய்திகள் ‘தளபதி63’ என்றே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட வீரராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே அதற்கான காட்சிகளை படமாக்க பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் ஒன்றை படக்குழு அமைத்துள்ளது. ‘தளபதி63’ல் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். 

மேலும் காமெடி நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு   ‘பிகில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

ஃபர்ஸ் லுக்கில் இரண்டு விஜய் உள்ளனர். தந்தை போன்ற வேடத்தில் ஒருவரும், மகன் போன்று ஒருவரும் உள்ளனர். கால்பந்தாட்ட வீரர் என ஏற்கனவே கூறியிருந்தபடி அவர் வீரருக்கான சீருடையிலே மகன் விஜய் இருக்கிறார். ஒரு மீன் மார்க்கெட்டில் இருவரும் இப்பது போல் உள்ளது.

தந்தை விஜய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு முன்பு மீன்வெட்டும் கட்டையில் ஒரு அரிவாள் இருக்கிறது. அவருக்கு பின்னால், மகன் விஜய் இருக்கிறார். நாளை விஜய்க்கு பிறந்தநாள் வரவுள்ள நிலையில், இன்று ஃப்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.