சினிமா

விஜய் வருமானவரி ஏய்ப்பு பற்றி விளக்கம் தருவாரா: ஹெச்.ராஜா கேள்வி

விஜய் வருமானவரி ஏய்ப்பு பற்றி விளக்கம் தருவாரா: ஹெச்.ராஜா கேள்வி

webteam

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசமாக வழங்கப்படவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கும், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் எதிராக நடிகர் விஜய் பேசியுள்ள வசனங்கள் குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை
செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்திருந்தார். இந்த சர்ச்சை தொடர்பாக பாஜக
தேசிய செயலாளார்  ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “மெர்சல் பட வசனம் விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில் ஜிஎஸ்டி
புதிய வரி அல்ல சாராயத்திற்கு 58% மேல் வரி விதிக்கப்படுகிறது. அடுத்து சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் ஏற்கனவே நாடுமுழுவதும்  
அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் இலவசம்தான் வழங்கப்படுகிறது. ஆக ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல். விஜய் அவர்களின்
வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.