மழை பிடிக்காத மனிதன் முகநூல்
சினிமா

"மழை பிடிக்காத மனிதன்" - ஒரு நிமிட காட்சி தொடர்பாக எழுந்த பிரச்னை! விஜய் ஆண்டனிக்கு மில்டன் நன்றி!

PT WEB

"மழை பிடிக்காத மனிதன்" படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட காட்சி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியானது.

அப்போது, படத்தின் துவக்கத்தில் தனக்கு தெரியாமல் ஒரு நிமிடக் காட்சி இடம் பெற்றதாக விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த காட்சியை விஜய் ஆண்டனி இணைத்ததாக தகவல் வெளியான நிலையில், அது தான் இல்லை என விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு இயக்குநர் விஜய் மில்டன் தனது எக்ஸ் பக்கத்தில், தெளிவுபடுத்தியதற்கு விஜய் ஆண்டனிக்கு நன்றி எனவும், இந்த பிரச்னையை சமரசம் செய்து, அந்த ஒரு நிமிட காட்சியை நீக்க வைத்ததற்கு சரத்குமாருக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும், இயக்குநரும் கலந்து பேசி திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்து விட்டனர் எனவும், இந்த பிரச்னை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாகவும் நடிகர் விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.