சினிமா

படம் தள்ளிப்போகும் என்று தெரிந்தே தேர்தலில் போட்டியிட்டேன்: விஷால்

படம் தள்ளிப்போகும் என்று தெரிந்தே தேர்தலில் போட்டியிட்டேன்: விஷால்

rajakannan

இரும்புத்திரை டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால், படம் தள்ளிப்போகும் என்று தெரிந்தே தேர்தலில்
போட்டியிட்டேன் என்று கூறினார்.

விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர்
வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால், நடிகை சமந்தா, இயக்குநர் எஸ்.பி. மித்ரன், இயக்குநர் சுசீந்திரன்,
தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு, தனஞ்ஜெயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஷால், ”இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம்.  
இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில்
போட்டியிட்டதால், படம் வெளி வருவதில் தாமதமானது. படம் தள்ளிப் போனால் அதிக வட்டி கட்டவேண்டியிருக்கும் என்று
எண்ணி தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால் சுயநலவாதி ஆகியிருப்பேன். 

தொழில்துறை நன்றாக இருக்கவேண்டும் என்ற ஓரே காரணத்தால் தான் இந்தப் படத்தை தள்ளி போடப்பட்டது. பணத்தை
இழந்து விட்டால் எப்போது வேண்டும் என்றாலும் சம்பாதிக்க முடியும். சோறு போட்ட இந்தத் தொழில்துறைக்கு நான் நல்லது
செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் என்  குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்டேன். 

ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில்
 மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற மித்ரனின்
வேண்டுதல் நிறைவேறிவிட்டது” என்றார்.

விழாவில் சமந்தா பேசும் போது, “விஜய் சார் , சூர்யா சார் போன்ற மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது
அவர்களுக்கு மரியாதை அளித்து நடிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்படத்தில் விஷாலுடன் நடித்தது என்னை விட வயதில்
இளையவர் ஒருவரோடு நடித்தது போல் இருந்தது. விஷால் இஸ் தி பெஸ்ட் என்றார் சமந்தா” என்றார்.