கங்குவா படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நில்லையில், கங்குவா படத்தின் படத்தொகுப்பாளர் மரணம் அடைந்திருப்பது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இயக்குநர் சிறுத்தை சிவா - நடிகர் சூரியா கூட்டணியில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரைப்படமான கங்குவா வருகின்ற நவம்பர் 14 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.. இதன் இசைவெளியீட்டு விழா கடந்த வாரம் நேரு விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது..
இதில், நடிகர் சூர்யா கதாநாயகனாக, பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில், மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், கங்குவா படத்தின் படத்தொகுப்பாளரான நிஷாத் யூசுஃப் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த படத்தொகுப்பாளரான 43 வயதான நிஷாந்த யூசுஃப் கொச்சியிலுள்ள பனம்பிள்ளி நகரில் உள்ள தனது பிளாட்டில் அதிகாலை 2 மணிக்கு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார்.
இந்நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்தவர்கள், இவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக எர்ணாக்குளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நிஷாத் இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருக்கு திருமணமாகி, குழந்தை இருக்கும்பட்சத்தில், மலையாள திரைப்படத்திலும் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 2022 ஆம் ஆண்டு தல்லுமாலா படத்துக்காக மாநில விருது பெற்றிருக்கிறார்.மேலும், உண்டா, ஒன், சௌதி வெள்ளக்கா, போன்ற பல திரைப்படங்களை திறம்பட தொகுத்து வழங்கியுள்ளார்.
இதனிடையே, படத்தொகுப்பாளர் நிஷாந்த யூசாஃப் இறந்ததது குறித்து நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது எக்ஸ் தள பக்கத்தில் அவர், “நிஷாத் இப்போது இல்லை என்பதை கேட்டும் போது மனம் உடைந்தது. கங்குவா படக்குழுவில் அமைதியான மற்றும் முக்கியமான நபராக எப்போதும் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்.. எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருப்பீர்கள்..! நிஷாத்தின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். RIP” என்று குறிப்பிட்டுள்ளார்.
படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த மரணம் கங்குவா படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.