ஒன்றிணைவோம்; மாணவர்களோடு துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர். இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராக தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக சூர்யாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா காலத்தில் கல்வியை பாதியில் கைவிட்ட மாணவர்களுக்காக நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் " ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம். ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களடைய கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அத மாத்திடலாம்" என்று வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.